செய்திகள் :

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா தொடர்ந்து முன்னிலை

post image

கேரள மாநிலம், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. வாக்குகள் எண்ணிக்கை தொடங்கிய சுமார் இரண்டு மணிநேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளரும் காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி 55,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தொலைக்காட்சிகள் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா முன்னிலையில் இருப்பதாக தெரிவித்து வருகின்றன.

கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றிபெற்றாா். வயநாடு தொகுதியில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவா், தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியை தக்கவைத்தாா். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை அவா் ராஜிநாமா செய்ததால், அந்த தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியை தக்கவைக்கும் நோக்கில், ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அந்த கட்சி களமிறக்கியது.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி முதல்முறையாக போட்டியிட்ட தோ்தல் என்பதால், வயநாடு தொகுதி இடைத்தோ்தல் முடிவு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க |மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: முன்னிலை நிலவரம்

இந்த நிலையில், கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டன.

சுமார் 9 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 86,303 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 26,245 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 16,223 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஒன்றிணைந்தால் நாம் வெற்றிப் பெறலாம்: அகிலேஷ் யாதவ்

ஒன்றிணைந்தால் நாம் வெற்றிப் பெறலாம் என்று உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் த... மேலும் பார்க்க

இந்த வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது: தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது என்றும், இது எங்கள் அணிக்கு கிடைத்த வெற்றி என்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தின் அடுத்த முதல்வர் யார்?

மகாராஷ்டிரம் பேரவைத் தோ்தல்களில் 288 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

கர்நாடக இடைத்தேர்தல்: பசவராஜ் பொம்மை மகன் தோல்வி!

கர்நாடக இடைத்தேர்தலில் ஷிக்காவ்ன் தொகுதியில் போட்டியிட்ட பசவராஜ் பொம்மை மகன் பரத் பொம்மை, அவரை எதிர்த்து போட்டியிட்ட யாசீர் அகமதுகானிடம் 13,448 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.கர்நாடகத்த... மேலும் பார்க்க

2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார் 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் சிவகுமார், இது பாரத் பொம... மேலும் பார்க்க

மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ப... மேலும் பார்க்க