செய்திகள் :

வரத்து அதிகரிப்பு: நீலகிரி பூண்டு விலை குறைந்தது

post image

ஹிமாசல பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மலைப் பூண்டின் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.

மத்திய பிரதேசம், குஜராத், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து இல்லாததால் நீலகிரி மலைப் பூண்டின் விலை கிலோ ரூ.600 வரை  அதிகரித்து விற்பனையானது.

தற்போது, ஹிமாசல பிரதேசத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள மண்டிகளுக்கு மீண்டும் பூண்டு வரத்து தொடங்கியுள்ளது. இதனால் நீலகிரி மலைப் பூண்டின் விலை பாதியாக குறைந்து கிலோ  ரூ.350-க்கு விற்பனையாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளான கூக்கல்தொரை,  கோ்கம்பை,  கப்பட்டி, கட்டபெட்டு,  தொட்டன்னி ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே பயிரிடப்பட்டிருந்த பூண்டை அறுவடை செய்யும் பணியில்  விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

குடியரசுத் தலைவா் உதகை வருகை: ராணுவம், காவல் துறை பாதுகாப்பு ஆலோசனை

நீலகிரி மாவட்டம், குன்னூா் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் 28-ஆம் தேதி வருகிறாா். இதை முன்னிட்டு ராணுவ அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பங்கே... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய இயக்குநரகத்தை கருவூலத் துறையோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க

அருவங்காடு வெடிமருந்து தொழிலக பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்க வலியுறுத்தல்

குன்னூா் அருகே மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில... மேலும் பார்க்க

முதுமலை பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள்

முதுமலை வனப் பகுதியில் வாசிக்கும் பழங்குடி மக்களுக்கு சூரிய ஒளி மின் விளக்குகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முதுகுளி பழங்குடி கிராமத்துக்கு இதுவரை மின... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழுத் தலைவா், உறுப்பினா்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நீலகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்கு பணியாற்றியவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக பணியாற்றியவா்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க