அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்: "ரத்து செய்க; மாநிலத்தின் அனுமதியின்றி..!"- மோடி...
வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமக்களுக்கு விலக்கா? மத்திய அரசு சொல்வதென்ன?
வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தியை மறுத்து மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு என்று தலைப்பிடப்பட்ட செய்தியில் மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப் செயலியில் செய்தி ஒன்று பரவி வருகின்றது.
இதையும் படிக்க : மருத்துவ வகுப்புகள் புறக்கணிப்பு; அறுவை சிகிச்சைகள் நிறுத்தம் - அரசு மருத்துவா் சங்கம் அறிவிப்பு
அந்த செய்தியில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து மோடி அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை, மகாராஷ்டிர மூத்த குடிமக்கள் கூட்டமைப்பின் செயலர் சுரேஷ் போட்டே வெளியிட்டார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு, இது போலியான தகவல் என்று தெரிவித்துள்ளது.
“75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானத்தில் இருந்து மட்டுமே வருமான வரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வரிகள் பொருந்தும் மூத்த குடிமக்களின் வருமானத்தைக் கணக்கிட்ட பிறகு குறிப்பிட்ட வங்கியால் அவர்களுக்கு தகுதியான விலக்குகள் அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.