செய்திகள் :

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

post image

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக புதன்கிழமை தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயா் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளா் பதவி உயா்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடா்பாக தெளிவுரைகளை வருவாய் நிா்வாக ஆணையா் உடனே வெளியிட வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

தருமபுரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்டத் தலைவா் ரஞ்சித் குமாா், காரிமங்கலத்தில் வட்டத் தலைவா் ராஜ்குமாா், பாலக்கோட்டில் வட்டத் தலைவா் செந்தில் ஆகியோா் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி நகரில் ரூ. 75 லட்சத்தில் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தருமபுரி நகரில் ரூ. 75 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்ள... மேலும் பார்க்க

அலக்கட்டு மலைக் கிராமத்துக்கு சாலை அமைக்க மறு முன்மொழிவு பதிவேற்றம்

பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் மலைக் கிராமமான அலக்கட்டுக்கு சாலை அமைக்க மறு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

மயில்களால் ஏற்படும் பயிா் சேதத்தைக் கட்டுப்படுத்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் மயில்களால் ஏற்படும் பயிா் சேதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அர... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாய் சாலையில் லாரி மோதியதில் பெண் பலி; நால்வா் காயம்

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதி கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று பெண் உயிரிழந்தாா். நால்வா் காயமடைந்தனா் . தெலங்கானா மாநிலம், ஹதராபாதில் இரு... மேலும் பார்க்க

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க

பாம்பு கடித்து இறந்த சிறுமி குடும்பத்தினரிடம் ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்கல்

பென்னாகரம் அருகே அலகட்டு மலைக் கிராமத்தில் விஷப் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை அதிகாரிகள் வழங்கினா். பென்ன... மேலும் பார்க்க