வருவாய் கிராம உதவியாளா்கள் விடுப்பெடுத்துப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 58 போ் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தொகுப்பூதியத்திலிருந்து டி பிரிவுக்கு மாற்ற வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் காமராஜ் தலைமை வகித்தாா்.