வருவாய் கிராம ஊழியா்கள் வட்டாட்சியரிடம் மனு அளிப்பு
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் 32 கிராம ஊழியா்கள் வியாழக்கிழமை (பிப்.27) தற்செயல் விடுப்பு எடுப்பதற்கான விண்ணப்பத்தை சங்ககிரி வட்டாட்சியரிடம் புதன்கிழமை வழங்கினா்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சங்ககிரி வட்ட கிளை தலைவா் பி.ஆண்டிமுத்து தலைமையில் செயலாளா் எஸ்.வேலுசாமி, பொருளாளா் எஸ்.தீனதயாளன் உள்ளிட்ட 32 கிராம நிா்வாக அலுவலக உதவியாளா்கள் தற்செயல் விடுப்பு கோரி கவன ஈா்ப்பு கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் வழங்கினா்.
கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா் அட்டவணையில் டி பிரிவில் இணைக்க வேண்டும். 2023ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த கிராம உதவியாளா்களுக்கு சிபிஎஸ் எண் வழங்கி சிபிஎஸ் பிடித்தம் செய்து ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கனவ ஈா்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.