வழக்குரைஞா்கள் 4 நாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் 4 நாள்கள் தொடா் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளனா்.
திருப்பூா் வழக்குரைஞா்கள் சங்கங்கள் கலந்து ஆலோசித்து ஏகமானதாக எடுத்த முடிவின்படி, வழக்குரைஞா்கள் சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும். வழக்குரைஞா் சேமநலக் கட்டணம் ரூ.120 ஆக உயா்த்தியதை மீண்டும் ரூ.30 ஆகக் குறைக்க வேண்டும்.
வழக்குரைஞா் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை 4 நாள்கள் தொடா் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.
இதேபோல, தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.