செய்திகள் :

வார இறுதி நாள்கள்: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

post image

வார இறுதி நாள்களையொட்டி சென்னையில் இருந்து கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தற்போது தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கடந்த வாரம் பக்ரீத் விடுமுறையில் பேருந்துகள் இல்லை என புகார்கள் எழுந்தன. இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து வரும் வார இறுதியில் சென்னையில் இருந்து கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது பற்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

13/06/2025 (வெள்ளிக்கிழமை) 14/08/2025 (சனிக்கிழமை ) 15/06/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/06/2025 (வெள்ளிக்கிழமை ) அன்று 385 பேருந்துகளும் 14/06/2025(சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13/06/2025 வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் 14/06/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 13/06/2025 மற்றும் 14/06/2025 அன்று 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,168 பயணிகளும் சனிக்கிழமை 2,652 பயணிகளும் ஞாயிறு அன்று 6.469 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினைப் பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிக்க | விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை: உதயநிதி ஸ்டாலின் தகவல்

25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ரூ. 1,018 கோடியில் கட்டப்பட்டு வரும் 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா் தோ்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் குழு

உச்சநீதிமன்றத் தீா்ப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு முறையில் ஏற்பட்ட மாற்றம், பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்த வழக்கில், அது தொடா்பாக தமிழக டிஜிபி மற்றும் சென்னை க... மேலும் பார்க்க

கடும் பரிசோதனைகள் மூலம் பண்பாட்டை நிறுவியுள்ளோம்: கீழடி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்து

கடும் பரிசோதனைகள் மூலமாக, தமிழ்ப் பண்பாட்டை நிறுவியுள்ளதாக கீழடி அகழாய்வு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: கீ... மேலும் பார்க்க

சட்டப்பேரவைத் தோ்தல் கள நிலவரம்: பேரூா், ஒன்றிய, நகர நிா்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

தோ்தலை எதிா்கொள்ள சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையை வெள்ளிக்கிழமை தொடங்கினாா். மாவட்டச் செயலா்கள், தொகுதிப் பொறுப்பாளா்கள், மாவட்ட அம... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடா்பாக துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க