வால்பாறை மலைப் பாதையில் லாரி மீது ஜீப் மோதி விபத்து
வால்பாறை- பொள்ளாச்சி மலைப் பாதை வளைவில் லாரி மீது ஜீப் மோதியதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள மலைப் பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த கொண்டை ஊசி வளைவு சாலையில் செல்வது குறித்து பல்வேறு விழிப்புணா்வு பதகைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வைத்துள்ளனா்.
ஆனால், அதையும் மீறி வால்பாறைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் வேகமாக செல்வது வளைவுகளில் முந்துவது போன்ற விதிமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனா். இந்நிலையில், அட்டகட்டி 11-ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்ற லாரியை முந்திச் செல்ல இடது பக்கமாக சென்ற ஜீப், லாரியின் அடிபாகத்தில் மோதி நின்றது. இதனால் வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் 40 நிமிஷம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.