செய்திகள் :

``விசிக மீது சந்தேகத்தை எழுப்பி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கிறார்..'' - எடப்பாடி குறித்து திருமா

post image

‘பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முனைப்பு காட்டி வருகிறது.

அதிமுக - பாஜக கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைய உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நேற்று (ஜூலை 16) கடலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், “  விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை.

திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விசிக-வின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா திமுக கூட்டணியில் இருக்க வேண்டும்? சிந்தித்து பாருங்கள். அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 17) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ விசிக மீது சந்தேகத்தை எழுப்பினால் திமுக கூட்டணிக்குள் ஒரு குழப்பம் உண்டாகும்.

அதன் மூலமாக விரிசலை ஏற்படுத்த முடியும். இதுதான் எடப்பாடியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. திடீர் என்று சிலர் நீங்கள் ஏன் இவ்வளவு சீட்தான் வாங்குகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் எங்கள் கட்சியின் வளர்சிக்காகவோ, நலனுக்காகவோ கேட்கவில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

எங்களைத் தூண்டிவிடும் நோக்கத்தில்தான் செய்லபடுகிறார்கள். அப்படி செய்தால்தான் திமுக மீது எங்களுக்கு ஒரு வெறுப்பு வரும் என்று நினைக்கிறார்கள். பாஜக மாதிரியான மதவாத சக்திகளை எதிர்ப்பதற்கு  மதசார்பற்ற ஒரு கூட்டணி பாதுகாப்பு அரண் என்கிறேன். அதுதான் எங்களுடைய கூட்டணி” என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கோவை பெரியார் நூலக கட்டத்தில் திருஷ்டி படம் - அமைச்சர் எ.வ.வேலு சொல்வது என்ன?

கோவை காந்திரபுரம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு செய்தார்.கோவை ப... மேலும் பார்க்க

``என் உயிருக்கு ஆபத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும்'' - டிஎஸ்பி சுந்தரேசன்

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசன், அமைச்சர் மெய்யநாதன் எஸ்காட்டிற்கு வேண்டும் என தன் வாகனத்தை வாங்கி கொண்டனர். அதன் பின்னர் வாகனத்தை தராததால் அவர் நடந்தே அலுவலகம் செல்வது போன்ற வீடியோ வெளியா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இஸ்லாம்பூர் டு ஈஷ்வர்பூர் - பெயர் மாற்றத்தின் பின்னணி என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற நகரின் பெயரை ஈஷ்வர்பூர் என மாற்றியுள்ளது அந்த மாநில பாஜக அரசு. சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடைசி நாளான நேற்று (18.07.2025) இந்த ... மேலும் பார்க்க

OPS: தடுமாறி நிற்கும் ஓபிஎஸ்? விஜய் பக்கமாக சாய்கிறாரா? - அடுத்தக்கட்ட மூவ் என்ன? | In Depth

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர், ஒரு பெரும் சமூகப் பின்னணியைக் கொண்டவர் என ஓ.பி.எஸ்ஸூக்கு எத்தனையோ வலுவான அடையாளங்கள் இருந்தாலும், இன்றைய தேதிக்கு அவர் அரசியலில் தன்... மேலும் பார்க்க

Donald Trump: ``BRICS நாடுகளின் இறக்குமதிக்கு 10% கூடுதல் வரி..'' - ட்ரம்ப் மிரட்டுவது ஏன்?

வளரும் நாடுகள் கூட்டமைப்பான BRICS-ல் உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 10% கூடுதல் வரி விதிப்பதாக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.இந்த கு... மேலும் பார்க்க

M.K.Muthu: கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.மு.க.முத்து - ஸ்டாலின் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து. பூக்காரி, பிள்ள... மேலும் பார்க்க