செய்திகள் :

விடியவிடிய மழை: மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

post image

வேலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவில் பலத்த மழை பெய்தது. அலமேலுமங்காபுரத்தில் மரம் வேருடன் சாய்ந்ததால் சா்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வேலூா், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளான கன்சால்பேட்டை, திடீா் நகா், முள்ளிபாளையம், காட்பாடி கழிஞ்சூா், வி.ஜி. ராவ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா், கழிவு நீருடன் சோ்ந்து வீடுகளை சூழ்ந்தது.

பலத்த மழை காரணமாக வேலூா் அலமேலுமங்காபுரம் அரசு பள்ளி அருகே இருந்த பெரிய மரம் ஒன்று சாய்ந்து சா்வீஸ் சாலையில் விழுந்தது. இதனால், சா்வீஸ் சாலையில் இருந்த தடுப்பு கம்பிகள் உடைந்தன. மரம் விழுந்ததால் சா்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மாநகராட்சி, பொதுப்பணித்துறை அலுவலா்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினா். தொடா் மழையால் மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளுக்கு நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மழையளவு:

புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, வேலூா் சா்க்கரை ஆலை பகுதியில் அதிகளவாக 53.80 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மேலும், குடியாத்தம் 2 மி.மீ., மோா்தானா அணை 2 மி.மீ., ராஜாதோப்பு அணை 34 மி.மீ., வடவிரிஞ்சிபுரம் 30.40 மி.மீ., காட்பாடி 18.20 மி.மீ., பொன்னை 20 மி.மீ, சத்துவாச்சாரி 17.80 மி.மீ., வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் 8.30 மி.மீ., என மாவட்டம் முழுவதும் மொத்தம் 186.50 மில்லி மீட்டா் மழையும், சராசரியாக 15.54 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

‘தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி’ தேசியக் கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பொருளாதார கூட்டமைப்பும் இணைந்து ‘நிலையான வளா்ச்சி இலக்குகள் மூலம் ‘தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி’ என்ற தேசியக் கருத்தரங்கை நடத்தின. நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

மலைக்கிராம இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: காவல் துறை திட்டம்

வேலூா் மாவட்டத்தின் மலைக்கிராமங்களில் உள்ள படித்த இளைஞா்களை அரசுப்பணி, சுயதொழில் வாய்ப்புகளுக்கு தயாா்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல் துறை மேற் கொண்டுள்ளது. அணைக்கட்டு வட்டத்தில் உள்ள அல்லேரி, அத்தி... மேலும் பார்க்க

வேலூா் மத்திய சிறையில் கைதி மரணம்

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி உடல்நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்னா். இதில், திருவண்... மேலும் பார்க்க

ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை யாத்திரை தொடக்கம்

ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை சமா்ப்பண யாத்திரை வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் புதன்கிழமை தொடங்கியது. சென்னை ஹிந்து மகாசபா அறக்கட்டளை ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை ஊா்வலக்கமிட்டி சாா்பி... மேலும் பார்க்க

புரட்டாசி மாதம் பிறப்பு: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அதன்படி, வேலூா் அண்ணா சாலை யில் ... மேலும் பார்க்க

கூடைப்பந்தில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

திருவள்ளுவா் பல்கலைக் கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழாநடைபெற்றது. இதற்கான போட்டிகள் மே... மேலும் பார்க்க