செய்திகள் :

விமானத்துக்குச் செல்ல தாமதம்: ஜெய்ஸ்வாலை விட்டுச்சென்ற அணியினர்!

post image

விமான நிலையத்திற்குச் செல்ல தாமதமானதால் ஜெய்ஸ்வாலை இந்திய கிரிக்கெட் அணியின் பேருந்து விட்டுச்சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவின் பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் | கேள்விக்குள்ளாகும் ரோஹித்தின் தலைமைப் பண்பு..! புஜாரா அறிவுரை!

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணியினர் செல்லும் பேருந்தில் விமான நிலையத்திற்குச் செல்வதற்காக இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வராததால் அவரை விட்டு, விட்டு இந்திய அணியினர் அடிலெய்ட் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் சிறிது நேரம் காத்திருந்தனர். ஆனால், ஜெய்ஸ்வால் வரத் தாமதமானது.

இதையும் படியுங்கள் |மந்தனா சதம் வீண்: ஒயிட்-வாஷ் ஆனது இந்திய மகளிரணி!

இந்திய கிரிக்கெட் அணியின், துணை ஊழியர்கள் அனைவரும் அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு புதன்கிழமை செல்ல திட்டமிட்டிருந்தனர். உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு விமானம் செல்லும் என்பதால், காலை 8.30 மணிக்கு விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய கிரிக்கெட் அணியின், துணை ஊழியர்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல இரண்டு பேருந்துகள் தயார் நிலையில் இருந்தது.

ரோஹித் சர்மா, அணித் தேர்வாளர் அஜித் அகர்கர், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் சரியான நேரத்துக்கு வந்தாலும், ஜெய்ஸ்வால் வராதது ரோஹித் சர்மாவை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது. 20 நிமிடம் கழித்து வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தனிக் கார் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் அவர் விமான நிலையம் வந்தார்.

இதையும் படியுங்கள் |காபா பிட்ச் எப்படி தயாராகிறது? பிட்ச் மேற்பார்வையாளரின் பேட்டி!

இது போன்ற நிகழ்வு இந்திய கிரிக்கெட் அணியினரிடம் முதல் முறையல்ல.. இதற்கு முன்னதாக, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவும்கூட பேருந்தைத் தவறவிட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒழுக்கம் தொடர்பான கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது. மேலும் ஏதேனும் விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தாமதத்திற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அணி நிர்வாகம் அபராதம் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்த் மற்றும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ஜெய்ஸ்வால் பெர்த் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்ஸில் 161 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றிபெறவைத்தில் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் |கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் யார்? கோலி, மெஸ்ஸிக்கு இடமில்லையா?

‘அகாய் கோலி’யின் அர்த்தத்தை அதிகம் தேடிய ரசிகர்கள்!

விராட் கோலியின் மகன் பெயர் அர்த்தத்தை இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.நடப்பு 2024 ஆம் ஆண்டில் பெரும்பான்மையான மக்களின் தேடல் எதை நோக்கி இருந்துள்ளது. நாட்டில் அதிகம் தேடப... மேலும் பார்க்க

9 ஆண்டுகளுக்குப் பிறகு டாப் 10 தரவரிசையில் கீழிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்..! மீண்டு வருவாரா?

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த டெஸ்ட் பேட்டரான ஸ்டீவ் ஸ்மித் பும்ரா ஓவரில் முதல் டெஸ்ட்டில் முதல்முறையாக சொந்த மண்ணில் கோல்டன் டக் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதலிரண்ட... மேலும் பார்க்க

கேள்விக்குள்ளாகும் ரோஹித்தின் தலைமைப் பண்பு..! புஜாரா அறிவுரை!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் சராசரி 11.83ஆக இருக்கிறது.5 போட்டிகள் கொண்ட பிஜிடி தொடரில் 1-1 என சமநிலையில் இருக... மேலும் பார்க்க

மந்தனா சதம் வீண்: ஒயிட்-வாஷ் ஆனது இந்திய மகளிரணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் நடைபெ... மேலும் பார்க்க

காபா ஃபிட்ச் எப்படி தயாராகிறது? ஃபிட்ச் மேற்பார்வையாளரின் பேட்டி!

கடந்தமுறை பார்டர் கவாஸ்கர் தொடரில் 1988க்குப் பிறகு முதல்முறையாக பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து மே.இ.தீவுகள் அணியிடமும் தோல்வியுற்றது. வரும் சனிக்கிழமை (டிச.14) 3... மேலும் பார்க்க

சாய் சுதர்சனுக்கு அறுவைச் சிகிச்சை..! பிசிசிஐ-க்கு நன்றி!

சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷன் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடுகிறார். 45 டி20 போட்டிகளில் 1,512 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 25 போட்டிகளில் 1,034 ரன்கள... மேலும் பார்க்க