செய்திகள் :

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானி!

post image

மகாராஷ்டிரத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விமானியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள மிரா சாலையில் வசித்து வரும் தனியார் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானி உடன் பணியாற்றிய விமான பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நவ்கார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவல் துறையினர் அளித்த தகவலின்படி, தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயது விமானப் பணிப் பெண், பணிநிமித்தமாக விமானியுடன் லண்டன் சென்றுள்ளார். லண்டன் சென்று திரும்பி வந்ததும் இருவரும் தங்கள் வீடுகளுக்கு ஒன்றாகவே சென்றுள்ளனர்.

மிரா சாலையில், வழியில் இருக்கும் தனது வீட்டிற்கு வருமாறு விமானி அழைப்பு விடுத்துள்ளார். அங்குச் சென்று பார்த்த பிறகுதான் வீட்டில் யரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அங்கு விமானப் பணிப்பெண்ணை, விமானி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

விமான பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விமானி தலைமறைவாகியுள்ளதால், அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உடன் பணிபுரிந்த சக ஊழியரை விமானி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், விமானத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க |சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

Pilot Accused Of Raping Air Hostess At His Thane Home

இஸ்கான் சைவ உணவகத்தில் இறைச்சி உண்ட இளைஞருக்கு குவியும் கண்டம்! வைரல் விடியோ!

லண்டனில் செயல்பட்டுவரும் இந்து மதத்தைச் சேர்ந்த இஸ்கான் சைவ உணவகத்தில் இளைஞர் ஒருவர், இறைச்சி உண்ணும் விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இஸ்கான் என்னும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க... மேலும் பார்க்க

உ.பி.யில் சைவ உணவு மட்டுமே வழங்கும் கே.எஃப்.சி.! காரணம் என்ன?

உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் உள்ள பன்னாட்டு உணவு நிறுவனமான கே.எஃப்.சியில் தற்காலிகமாக சைவ உணவுகளை மட்டுமே விற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகள் கன்வர் யாத்திரை செல்லும் ... மேலும் பார்க்க

கிர்ப்டோ பணப் பரிமாற்ற நிறுவனம் முடக்கம்: வாடிக்கையாளர்கள் நிலை என்ன?

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் முன்னணி நிறுவனமான காயின் டி.சி.எக்ஸ். மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.கடந்த 19ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தால், இந்த தளத்திலிருந்து 44 மில்லியன் டாலர்கள் (ரூ... மேலும் பார்க்க

ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்ட சகோதரர்கள்!

ஹிமாசலப் பிரதேசத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். மணப்பெண்ணும் முழு சம்மதத்துடன் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் இருவரை திருமணம் செய்துகொண்டார். கிராம மக்கள் முன்னிலையில்... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கியதில் பலி !

மத்தியப் பிரதேசத்தில் மீன்படிக்கச் சென்ற இளைஞர் முதலை தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் டோரியா டெக்கிற்கு அருகிலுள்ள கென் ஆற்றில் பாயும் ஓட... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கருடன் கேஜரிவால் சந்திப்பு

தில்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேரிவால் சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மாநிலங்க... மேலும் பார்க்க