வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காப்புக்காடு, காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் சுரேஷ்குமாா் (51). மர வியாபாரியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ரப்பா் பால் வெட்டும் தொழிலாளியான கனகராஜ் (54) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
சனிக்கிழமை காப்புக்காட்டில் நின்றிருந்த சுரேஷ்குமாரை கனகராஜ் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவரை குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில், புதுக்கடை போலீலாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.