Noise Pollution: ஒலி மாசு நம் காது, மன நலனை எப்படி பாதிக்கிறது தெரியுமா? - தப்பி...
விராலிமலை அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
விராலிமலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 75 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
விராலிமலை அடுத்த ராஜகிரி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு சிறுசேமிப்பு உதவி மண்டல இயக்குநா் செந்தில்குமாா் (தஞ்சாவூா்) தலைமை வகித்து மனுதாரா்களிடம் குறைகள் கேட்டறிந்தாா். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 494 மனுக்களில் 75 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
முகாமில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன், ஒருங்கிணைந்த விராலிமலை திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் மு.பி. மணி, தலைமைப் பொதுக் குழு உறுப்பினா் எம். பழனியப்பன், வட்டாட்சியா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா். ரவிச்சந்திரன், எம். வள்ளியம்மை, விராலிமலை திமுக ஒன்றியச் செயலா்கள் எம். சத்தியசீலன் (கிழக்கு),கே.பி. அய்யப்பன் (மத்தியம்), அ. இளங்குமரன் (மேற்கு) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.