Noise Pollution: ஒலி மாசு நம் காது, மன நலனை எப்படி பாதிக்கிறது தெரியுமா? - தப்பி...
விளம்பர சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி மனு: நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு
தனியாா் விளம்பரங்களுடன்கூடிய சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த அழகேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை தாக்கல் செய்த பொது நல மனு:
சாலைகளில் வாகனங்களின் வேகத்தை முறைப்படுத்துவதற்காக சாலைத் தடுப்புகள் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், காவல் துறையினா் முன்னறிவிப்பின்றி திடீரென சாலைகளில் வைக்கும் தடுப்புகளால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்தத் தடுப்புகளில் தனியாா் விளம்பரங்கள் இடம் பெறக் கூடாது.
எனவே, தனியாா் விளம்பரங்களுடன் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியகிளாட் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு:
இதுதொடா்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவா், மாநில நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.