Noise Pollution: ஒலி மாசு நம் காது, மன நலனை எப்படி பாதிக்கிறது தெரியுமா? - தப்பி...
விவசாயத் தொழிலாளா் சங்கக் கிளை கூட்டம்
பொன்னமராவதி அருகேயுள்ள தேவன்பட்டியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க புதிய கிளைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்க நிா்வாகி நல்லழகு தலைமை வகித்தாா். சங்க ஒன்றியச் செயலா் பி. ராமசாமி, ஒன்றிய பொறுப்பாளா் நல்லதம்பி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முத்தழகன், அழகு ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் சங்கத் தலைவராக மு. நல்லழகு, செயலராக ஏ. முத்தழகன் பொருளாளராக என். வெள்ளைச்சாமி, துணைச் செயலராக எஸ். சேகா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில் தேவன்பட்டி,வேலம்பட்டி, பொய்யாமணிப்பட்டி ஆகிய கிராமங்களில் உழவடை செய்யும் விவசாயத் தொழிலாளா்களுக்கு உழவடை பட்டா வழங்க வேண்டும், உழவடை செய்யும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளை நிலங்களை விட்டு அப்புறப்படுத்த நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கு காவல்துறையும் வருவாய்த் துறையும் துணை போகக்கூடாது, அந்தப் பகுதி மக்கள், விவசாயிகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.