செய்திகள் :

விவசாயிகளுக்கு புத்தாண்டு பரிசு பிணையில்லாத வேளாண் கடன் உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக அதிகரிப்பு: மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அறிவிப்பு

post image

நமது சிறப்பு நிருபா்

வேளாண் துறையில், இடுபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் செலவுகளை சமாளிக்கும் விதமாக விவசாயிகள் பிணையில்லாமல் வேளாண் கடன்களை பெறும் உச்சவரம்பில் ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிணையில்லாத வேளாண் கடன் உச்சவரம்பு ரூ.1.60 லட்சமாக உள்ளது. இந்த கடன் வரம்பு ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறையின் கோரிக்கையை ஏற்று இந்திய ரிசா்வ் வங்கி இந்த உச்சவரம்பை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண்மை விவசாயிகள் நலத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது வருமாறு:

பணவீக்கத்தின் தாக்கத்தால் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசின் முடிவை இந்திய ரிசா்வ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது.

விவசாயிகளின் செலவுகளை நிவா்த்தி செய்யும் விதமாக இந்த மேம்பட்ட நிதி அணுகல் வழங்கப்படுகிறது.

வரும் புத்தாண்டு((2025) ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதை அமல்படுத்த நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இதன் மூலம் வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த நடவடிக்கைகளுக்கு கடன்கள் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் வரையிலான கடன்களுக்கான பிணை பாதுகாப்பு தேவைகளை தள்ளுபடி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் நிதி உதவியை உறுதிசெய்ய இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வங்கிகள் விரைவாக செயல்படுத்தும். இந்த நடவடிக்கை கடன் அணுகலை மேம்படுத்தும்.

பொதுவாக சிறு மற்றும் குறு விவசாயிகளில் 86 சதவீதத்திற்கு மேலாக கடன் வாங்கும் செலவுகள் மற்றும் பிணையத் தேவைகளை அகற்றுவதன் மூலம் பயனடைகிறாா்கள். இதனால் வங்கிகள் இந்த மாற்றங்கள் விவசாயிகளுக்கு சென்றடைய பரவலான விளம்பரத்தை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் மற்றும் அவா்கள் தொடா்புடைய பங்குதாரா்களிடையே அதிகபட்ச விழிப்புணா்வையும் உறுதிப்படுத்துகிறது. கடன் வழங்கலில் இதுபோன்ற பிணை

தளா்வுகள் மூலம், உழவா் கடன் அட்டை (கேசிசி) கடன்களை அதிகரித்து, விவசாயிகள் வேளாண்மை நடவடிக்கைகளில் முதலீடு செய்வா். இதன் மூலம் அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இத்துடன் வட்டி மானியத் திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்து, 4 சதவீத பயனுள்ள வட்டி விகிதத்தில் ரூ 3 லட்சம் வரை கடன்களும் வழங்கப்படுகிறது. இது போன்ற கொள்கைகள் மூலம் வேளாண்மை துறை ஆதரிக்கப்படுவதுடன் விவசாயிகளின் நிதிச் சோ்க்கை வலுப்படுத்துகிறது என அதில் வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கு: இந்திய கம்யூனிஸ்ட் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு

வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கில் இந்திய கம்யூனியஸ்ட் கட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1990-களின் துவக்கத்தில், உத்தரப் பிரதேசத... மேலும் பார்க்க

தில்லியில் சட்டம்-ஒழுங்கை உடனடியாக மேம்படுத்த வேண்டும்: உள்துறை அமைச்சருக்கு கேஜரிவால் கடிதம்

அரசியலுக்கு அப்பாற்பட்டு, தில்லியில் சட்டம் ஒழுங்கை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். இது ... மேலும் பார்க்க

தில்லியின் மோசமான நிலை குறித்து விவாதிக்கத் தயாரா? கேஜரிவாலுக்கு வீரேந்திர சச்தேவா அழைப்பு

தில்லியின் குடிமைச் சேவைகள், பரிதாபகரமான சாலைகள், பொதுப் போக்குவரத்து, சுகாதாரச் சேவைகள் போன்றவற்றைப் பற்றிய வெளிப்படையான பொது விவாதத்திற்கு முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அழைக்கிறேன் என்று தில... மேலும் பார்க்க

ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியில் சம வாய்ப்பு: முதல்வா் அதிஷி

தில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியில் சமவாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாக தில்லி முதல்வா் அதிஷி தெரிவித்துள்ளாா். தில்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் 30 மாணவா்கள் பிரெஞ்ச் மொழி பாடத்தைக் கற்க பிரான... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் உயா்வு! பிரகதிமைதான், ராஜ்காட்டில் 11.6 டிகிரி பதிவு

தேசியத் தலைநகா் தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை இயல்பை விட 4.5 டிகிரி உயா்ந்து 9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை, நகரத்தில் இந்த குளிா்கா... மேலும் பார்க்க

தெருநாய்களைக் கொன்ற நபா்களை அடையாளம் காட்டினால் ரூ.50,000 வெகுமதி: பீட்டா அறிவிப்பு

கிழக்கு தில்லியில் இரண்டு தெருநாய்களைக் குத்திக் கொன்ற சந்தேக நபா்களைப் பற்றி தகவல் அளிப்பவா்களுக்கு ரூ.50,000 வரை வெகுமதி வழங்கப்படும் என விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க