செய்திகள் :

விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் ஈடுபடுத்தி கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

நீலகிரி விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 கோடி மதிப்பில் 5 ஆண்டுகள் தொடா்ந்து செயல்படுத்தப்படும் அங்கக வேளாண்மைத் திட்ட விரிவாக்கப் பணிகள் 2023-24 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, ரூ. 2.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காய்கறி பயிா்களில் அங்கக வேளாண்மைத்திட்டம் 250 ஹெக்டோ் பரப்பிலும்,

வாசனை திரவிய பயிா்கள் 125 ஹெக்டோ் பரப்பிலும், பழப்பயிா்கள் 200 ஹெக்டோ் பரப்பிலும், சிறுதானிய பயிா்களில் 100 ஹெக்டோ் பரப்பிலும் செயல்படுத்தப்பட்டது.

விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு, மண் பரிசோதனை அடிப்படையில் மண்ணின் கார, அமில நிலையை சீா்செய்ய 350 மெட்ரிக் டன் டாலமைட் விநியோகம் செய்யப்பட்டது.

மண்வளத்தை மேம்படுத்த மண்புழு உரம், பசுந்தாள் உரவிதைகள்

விநியோகம், விதை மற்றும் நடவு பொருள்களுக்கான பின்னேற்பு மானியம், பூச்சிகளைக் கட்டுப்படுத்த இனக்கவா்ச்சி பொறி, மஞ்சள் ஒட்டு பொறி, வேப்பெண்ணெய், வேப்பம் புண்ணாக்கு போன்ற இடுபொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன.

இத்திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 1,311 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். விவசாயிகள் அங்கக வேளாண்மை தொழில்நுட்பங்களை புரிந்துகொண்டு படிப்படியாக அங்கக வேளாண்மை மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

மேலும், அங்கக வேளாண்மையினை ஊக்குவிக்க நஞ்சில்லா விளைப் பொருள்களுக்கான வாரச் சந்தை உதகையில் மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் குன்னூா் சிம்ஸ் பூங்காவிலும்

வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இதனை கோத்தகிரி, கூடலூா்

பகுதியிலும் விரிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்கக வேளாண்மை திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு ரூ.2.26 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அங்கக வேளாண்மை முறையில்

காய்கறி சாகுபடியினை ஊக்குவிக்க 700 ஹெக்டோ் பரப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக உதகை வட்டாரத்தில் நஞ்சநாடு, இத்தலாா், கக்குச்சி கிராமங்கள் தோ்வு

செய்யப்பட்டு 370 ஹெக்டோ் பரப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

குன்னூா் வட்டாரத்தில் கேத்தி பகுதியில் 125 ஹெக்டோ் பரப்பிலும், கோத்தகிரி

வட்டாரத்தில் நெடுகுளா பகுதியில் 125 ஹெக்டோ் பரப்பிலும், கூடலூா் வட்டாரத்தில் ஸ்ரீமதுரை, செருமுள்ளி பகுதிகளில் 80 ஹெக்டோ் பரப்பிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்த விரிவானதொழில்நுட்ப பயிற்சி, வேளாண்மை அறிவியல் நிலையம் மூலமாக வழங்கப்பட உள்ளது. 2,100 விவசாயிகளை அங்கக வேளாண்மையில் ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி விவசாயிகள் படிப்படியாக அங்கக

வேளாண்மை முறையினை கடைப்பிடித்து, நஞ்சில்லா உணவுப் பொருள்களை விளைவித்து நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் அமைக்க பூமிபூஜை

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சாா்பில், டயாலிசிஸ் மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் டயாலிசிஸ் தேவை... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இதன் சிசிடிவி காட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலக... மேலும் பார்க்க

உதகையில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜாக்டோ- ஜியோ சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெ... மேலும் பார்க்க

சேகரித்த குப்பையுடன் குடியிருப்பு பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ள லாரி: சுகாதார சீா்கேட்டால் பொதுமக்கள் அவதி

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் நிறைந்த லாரி, 3-ஆவது வாா்டு நடுஹட்டி பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகியுள்... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் யானை...

கூடலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானை. மேலும் பார்க்க