விஷம் குடித்த இளைஞா் மரணம்
தூத்துக்குடியில் விஷம் குடித்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சோ்ந்த சாலமோன் மகன் மனோ கிறிஸ்டோபா் (29). கூலித்தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதில், குடும்பத்தினா் இவரைத் திட்டினராம். இதனால் அவா் கடந்த அக்டோபா் 11ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கியதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆட்டோ ஓட்டுநா்: தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலை அருகே உள்ள எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மூக்காண்டி மகன் ஆறுமுகம் (54). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, கடன் பிரச்னை இருந்துவந்ததாம்.
மேலும், குடும்பப் பிரச்னை காரணமாக, இவரது மனைவி கடந்த 3 மாதங்களுக்கு முன்னா் இவரை விட்டு பிரிந்து தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால், மனமுடைந்த ஆறுமுகம் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இரு சம்பவங்கள் குறித்தும் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.