செய்திகள் :

வீடு முழுக்க ரத்தம்; மூவர் கொலை; ஓரே இரவில் சிதைக்கப்பட்ட குடும்பம் - திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்

post image

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமேலு ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். தம்பதியின் மகன் செந்தில்குமா். மென்பொருள் பொறியாளரான இவர் கோவையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்தார். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக பெற்றோரை அழைத்துச் செல்ல செந்தில்குமார் திங்கள்கிழமை இரவு சேமலைக்கவுண்டன்புதூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.

திங்கள்கிழமை இரவு உணவருந்திய பின் தாய் அலமேலு, தந்தை தெய்வசிகாமணி ஒரு அறையிலும், மகன் செந்தில்குமார் மற்றொரு அறையிலும் தூங்கியுள்ளனர். இந்நிலையில். செவ்வாய்க்கிழமை காலை மூவரும் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அத்துடன் வீட்டில் இருந்த நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி, சரக டி.ஐ.ஜி உமா, ஈரோடு காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

கொலை

இந்தக் கொலை குறித்து முதலில் தகவல் தெரிவித்த தெய்வசிகாமணிக்கு சவரம் செய்யும் தொழிலாளி கூறுகையில், "வாரத்துக்கு ஒருமுறை தெய்வசிகாமணிக்கு சவரம் செய்ய தோட்டத்துக்கு வருவது வழக்கம். அதுபோலவே இன்று அதிகாலை 6 மணிக்கு தோட்டத்து வீட்டுக்கு வந்தேன். அப்போது, தெய்வசிகாமணி தலையில் பலத்த காயத்துடன் வீட்டுக்கு வெளியே இருந்த மரத்துக்கு அடியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். வீட்டின் கதவு தாளிடப்பட்டு இருந்தது. திறந்து உள்ளே சென்றுபார்த்தபோது, அலமேலுவும், செந்தில்குமாரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துகிடந்தனர். அந்த அறை முழுக்க ரத்தமாக காணப்பட்டது" என்றார்.

இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரிக்கையில், "தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமேலு தோட்டத்து வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துதான் அந்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தெய்வசிகாமணிக்கு தெரிந்தவராக இருக்க வாய்ப்பிருக்கலாம். அதனால்தான் அவர் வீட்டை விட்டு வெளியே வந்திருக்க வாய்ப்புள்ளது. முதலில் அவரை இரும்புக் கம்பி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கியுள்ளனர். அதில், அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் சென்றவர்கள் அலமேலுவையும், செந்திலையும் தலையில் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். பின்னர், பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தெய்வசிகாமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணை

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சந்தேகிக்கப்படும் 10 பேரிடம் விசாரித்து வருகிறோம். கடந்த சில நாள்களுக்கு முன்பு தெய்வசிகாமணியின் தோட்டத்தில் வேலை செய்துவந்த தென்மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவரையும் பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும், சந்தேகிக்கப்படும் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை சேமலைக்கவுண்டன்புதூர் கிராமப் பகுதியில் பதிவான செல்போன் எண்களையும் ஆராய்ந்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் தெய்வசிகாமணியின் 15 ஏக்கர் முழுக்க தடங்களை சேகரிக்க 50 காவலர்களைக் கொண்டு சோதனை செய்து வருகிறோம். மேலும், இதற்கென 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றனர் . மூவர் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

`நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர் நான்' - பண மோசடிசெய்த இளைஞர் சிக்கியது எப்படி?

சென்னை எழும்பூர், பெருமாள்ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் வீர ராகவன் (28). இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிற... மேலும் பார்க்க

சென்னை: மனைவியின் ஆசையை நிறைவேற்ற செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்

சென்னை தாம்பரம், கிருஷ்ணா நகர் முல்லை தெருவில் குடியிருந்து வருபவர் மோகன் குமார் (39). கார் டிரைவராக உள்ளார். இவரின் மனைவி பிரியங்கா (36). கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசை ஆசையாக பிரியங்காவுக்கு 4 சவ... மேலும் பார்க்க

நள்ளிரவில் தாய், தந்தை, மகன் அடித்துக் கொலை; திருப்பூரை அதிரவைத்த கொடூரம்! - போலீஸ் விசாரணை

திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டன்புதூர் வலுப்பூர் அம்மன் கோயில் அருகே தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமேலு ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். மென்பொருள் பொறியாளரான இவர்களது மகன் ... மேலும் பார்க்க

விஏஓ வீட்டில் 53 சவரன் தங்கநகைக் கொள்ளை; பைக்கை வைத்து திருடர்களை போலீஸார் மடக்கி பிடித்தது எப்படி?

நெல்லை மாவட்டம் பேட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ். இவர், பழைய பேட்டையில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செங்கோல் மேரி, நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

அப்பார்ட்மென்ட்டில் உயிரை மாய்த்துக்கொண்ட பெண் பைலட்; காதலன் கைது - குடும்பத்தினர் எழுப்பும் கேள்வி!

மும்பையைச் சேர்ந்த 25 வயது பைலட் ஸ்ரிஷ்டி டுலி, அவரது அப்பார்ட்மெண்டில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டுலியின் குடும்பத்தினர் வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது காதலர் ... மேலும் பார்க்க

உஷார்: `பங்குச்சந்தையில் அதிக லாபம் பாக்கலாம்' - 75 வயது முதியவரிடம் ரூ.11 கோடியை ஏமாற்றிய கும்பல்!

மும்பையில் இரண்டு நாள்களுக்கு 77 வயது மூதாட்டியை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து அவரிடமிருந்து ரூ.3.80 கோடியை அபகரித்தனர். இது போன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக... மேலும் பார்க்க