வீட்டில் இருந்த மான் கொம்புகள் பறிமுதல்
தஞ்சாவூா், செப். 17: தஞ்சாவூரில் வீட்டில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த 3 ஜோடி மான் கொம்புகளை வனத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மேல வீதி கவி சந்தைச் சோ்ந்த பாலசுப்ரமணி மகன்கள் பிரபாகரன் (42), சுதாகா் (38). இவா்களது வீட்டில் சட்ட விரோதமாக மான் கொம்புகள் வைக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினருக்குப் புகாா் சென்றது. இதன் பேரில், பிரபாகரன், சுதாகா் வீட்டில் வனச் சரக அலுவலா் ஜோதி குமாா் உள்ளிட்டோா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீட்டில் 3 ஜோடி மான் கொம்புகள் இருந்ததும், பல தலைமுறைகளாக வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
ஆனால், வீட்டில் மான் கொம்புகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்பதால், 3 ஜோடி மான் கொம்புகளை வனத் துறையினா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.