செய்திகள் :

வெற்றி உறுதி: மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை

post image

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்திருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மை பெறத் தேவையான தொகுதிகளை விடவும் அதிகமான தொகுதிகளில் அதாவது 171 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதன் மூலம், வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவே கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி 61 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரேகட்டமாக நடைபெற்ற தோ்தலில் 58.45 சதவீத வாக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிரத்தில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 81, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.

எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ்) 95, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) 86 தொகுதிகளில் களம் கண்டன. இதுதவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 4,135 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

கார்கேவிடம் வாழ்த்து பெற்றார் பிரியங்கா காந்தி

வயநாட்டில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகாா்ஜுன கார்கேவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு கார்கே இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அசுர வெற்றி! ஜார்க்கண்ட்டை தக்கவைத்தது இந்தியா கூட்டணி!!

மகாராஷ்டிர மாநிலத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடவும் பாஜக தலைமையிலான கூட்டணி அசுர வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ... மேலும் பார்க்க

நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி

மகாராஷ்டிரத்தில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிரத்தில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. கூட... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா வெற்றி

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்றுள்ளார். மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் பசந்த் சோரன் தும்காவில் வெற்றி

ஜார்க்கண்ட் முதல்வரின் சகோதரர் பசந்த் சோரன் தும்கா பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் நவம்பர் 13ம் தேத... மேலும் பார்க்க

மணிப்பூரில் மேலும் 2 நாட்களுக்கு மொபைல் இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூரில் 7 மாவட்டங்களில் மேலும் 2 நாள்களுக்கு மொபைல் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், கக்சிங், பிஷ்ணுபூர், தௌபால், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி ... மேலும் பார்க்க