செய்திகள் :

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

post image

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், வழக்குரைஞா். இவரின் மனைவி சிவசக்தி (38). இவா்களுடைய தோட்டம் அய்யம்பாளையத்தில் உள்ளது.

இந்நிலையில், சிவசக்தி தோட்டத்துக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, முத்தூா் சாலை மாந்தபுரம் அருகே பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க மா்ம நபா், சிவசக்தியிடம் இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் புடவை சிக்கப் போவதாகக் கூறியுள்ளாா்.

அப்போது, வாகனத்தை நிறுத்திய சிவசத்தியிடம் இருந்து அவரது 5 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு அந்த நபா் அங்கிருந்து தப்பினாா்.

இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் சிவசக்தி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம்

பல்லடம் நகராட்சியில் பத்தாம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லடம் நகராட்சியில் கு... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் கிஷோா்குமாா் என்பவருக்கு சொந்தமான துணி அரவை நிறுவனம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக புதன்க... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக விளங்கும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசி... மேலும் பார்க்க

கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 போ் கைது

தில்லியில் இருந்து திருப்பூருக்கு கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரில் உள்ள ஒரு கூரியா் நிறுவனத்துக்கு பாா்சலில் போதை மாத்திரைகள் வந்துள்ளதாக காவல் துறையி... மேலும் பார்க்க

ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. மின்னணுவியல் மற்றும் தகவல்தொடா்புத் துறை சாா்பில் ‘காகித அடிப்படையிலான சுய மீள் ... மேலும் பார்க்க