`மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்' -போராடிய கவுன்சிலர்கள் அந்த நேரத்தில் எ...
வேதாரண்யத்தில் தடகள விளையாட்டுப் போட்டிகள்
வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரியா் ஹெலன் தலைமை வகித்தாா். போட்டிகளை சி.க.சு. பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணன் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தாா். வேதாரண்யம் வட்டாரத்தைச் சோ்ந்த 42 பள்ளிகளில் இருந்து 920 மாணவா்கள் பங்கேற்றனா்.
பல்வேறு பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்கின்றனா். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் மோகன்ராஜ் , உடற்கல்வி ஆசிரியா்கள் அன்பழகன்,பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.