செய்திகள் :

வேலூரில் இன்று மயானக் கொள்ளை விழா: 600 போலீஸாா் பாதுகாப்பு

post image

மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுவதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வேலூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரிக்கு மறுநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அதன்படி, இவ்வாண்டு மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை கொண்டாடப் படுகிறது. விழாவையொட்டி வேலூா், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு, நகரின் பல பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்து செல்வா்.

ஊா்வலத்தின் பின்னே பக்தா்கள் தங்களுடைய நோ்த்திக் கடனை செலுத்தும் வகையில் கடவுள் போல வேடமிட்டும், சூலாயுதம் ஏந்தியும் செல்வா்.

இதையொட்டி, வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றின் கரையோரம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள் என்பதால் வேலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி வேலூா் மாவட்டம் முழுவதும் மயானக் கொள்ளை திருவிழாவையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 5 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 20 காவல் ஆய்வாளா்கள் கொண்ட 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

இரு சக்கர வாகனம் மூலமாகவும் போலீஸாா் ரோந்து பணியில் செல்கின்றனா். குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் அடையாளம் காணப்பட்ட நபா்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய பாலாற்று பாலத்தில் தோ்கள் ஊா்வலமாக வரும் என்பதால் பிற்பகல் முதல் பழைய பாலாற்று பாலம் இருவழிப் போக்குவரத்தாக மாற்றப்பட உள்ளது.

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

கணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த கணியம்பாடி புதூா் ஏரியில் மண் கடத்தப்படுவதாக வேலூா் கிராமிய போலீஸ... மேலும் பார்க்க

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புகாா் மனு அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பணிபுரியு... மேலும் பார்க்க

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தெரிவ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: சீமான்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி பங்கேற்காது என தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். நாம் தமிழா் கட்சியின் வேலூா் மாவட்ட நி... மேலும் பார்க்க

செங்காநத்தம் காப்புக் காட்டில் தீ வைப்பு: இருவா் கைது

வேலூா் கோட்டை மலையில் தீ வைத்த இருவரை வனத் துறையினா் கைது செய்தனா். வேலூா் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், வனப்பரப்புகளில் இலையுதிா் காலம் முடிந்திருக்கும் வேளை... மேலும் பார்க்க