செய்திகள் :

வேலூர்: பேருந்து வசதி கேட்டு லோடு ஆட்டோவில் வந்த பள்ளி மாணவர்கள்; உடனடி தீர்வு காண ஆட்சியர் உத்தரவு!

post image
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (நவம்பர் 4) நடைபெற்றது.

பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 332 மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, அவற்றைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டார். இதனிடையே, கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி மலைக் கிராமத்தைச் சேர்ந்த 40 பள்ளி மாணவ - மாணவிகள் சீருடையில் பள்ளிக்குச் செல்லாமல், பேருந்து வசதி பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க லோடு வேனில் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் வேனை நிறுத்தி, பள்ளி மாணவர்களைக் கீழே இறக்கிவிட்டு, லோடு வேன் மீது வழக்குப் பதிந்தனர்.

சீருடையில் மனு அளிக்கவந்த மாணவ - மாணவிகள்

விசாரணைக்குப் பிறகு மாணவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர். கூட்டரங்கின் முன்னால், கூடி நின்றிருந்த மாணவர்களிடம் ஆட்சியரே அருகில் சென்று, "என்ன ஸ்கூல் போகாமல் இங்க வந்துருக்கிங்க. என்ன பிரச்னை?’’ என்று கேட்டறிந்தார். அப்போது, "வேலூர்ல இருந்து எங்க மலை கிராமத்துக்கு இயக்கப்படுகிற அரசுப் பேருந்து சரியான நேரத்துக்கு வருவது கிடையாது. வேலூர்ல இருக்கிற பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து தான் படிக்கிறோம். மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது, பேருந்து கிடைக்காததால் சிரமப்படுகிறோம்’’ என்றனர்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, "நீங்க இப்படியெல்லாம் வரக்கூடாது. முதல்ல படிப்புதான் முக்கியம். உங்க பெற்றோர்கள் இல்லைனா ஊர்க்காரர்களில் யாரோ ஒருவர் வந்து என்னிடம் சொல்லியிருந்தாலே போதும். நீங்க வந்துருக்க வேண்டாம். சரி, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்’’ எனப் புன்முறுவலோடு அறிவுரைக் கூறி, "மாணவர்களை யார் அழைத்து வந்தது?’’ எனக் கேட்டார். மாணவர்களுடன் வந்திருந்த நாயக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி கோவிந்தசாமி, ``நான்தான் மேடம். நாங்க வந்த வண்டி மீதும் போலீஸ்காரங்க கேஸ் போட்டுடாங்க’’ என்றார்.

புன்முறுவலோடு அறிவுரைக்கூறிய ஆட்சியர் சுப்புலெட்சுமி

"லோடு வண்டியில் வந்தா வழக்குத்தான் போடுவாங்க’’ என்ற ஆட்சியரிடம், "எங்க கிராமத்துல இருந்து வருவதற்கு வேறு வண்டி கிடையாது’’ என்றார் கோவிந்தசாமி. இதையடுத்து, டிராவல்ஸ் வேனை ஏற்பாடு செய்த ஆட்சியர் சுப்புலெட்சுமி, மாணவர்களைப் பத்திரமாக அவர்களின் கிராமத்துக்கு அனுப்பி வைத்தார். பேருந்து வசதி குறித்த புகார் மனு மீதும் உடனே நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆட்சியர் சுப்புலெட்சுமி.

இது குறித்துப் பேசிய நாயக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி கோவிந்தசாமி, "வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள செங்காநத்தம் மலை கிராமத்துல இருந்து ரங்காபுரம் வழித்தடத்தில் ஓட்டேரி மார்க்கமாக எங்க மலை கிராமத்துக்குத் தினமும் ஒரு அரசுப் பேருந்து 4 நடைகள் இயக்கப்படுகிறது. இது இல்லாம, காட்பாடியில இருந்தும் வேலூர் பழைய பேருந்து நிலையம் வழித்தடத்தில் பாகாயம் மார்க்கமாக ஓர் அரசுப் பேருந்து ஒரே நடை மட்டும் இயக்கப்படுகிறது.

நாயக்கனேரி, குளவிமேடு போன்ற சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் வேலூர் பகுதியில இருக்கிற பள்ளி, கல்லூரிகளில்தான் படிக்கிறாங்க. படிச்சு முடித்த பலரும் வேலூர் நகரில்தான் வேலைக்குப் போறாங்க. காலை நேரத்துல இந்த அரசுப் பேருந்துகள் மூலமாகத்தான் பயணிக்கிறாங்க. ஆனா, மாலை நேரத்துல பேருந்து வசதிகள் சரிவர இயக்கப்படுவதில்ல. காட்பாடியில இருந்து ஒரே நடை இயக்கப்படும் அரசுப் பேருந்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். இந்த பேருந்திலும் கடந்த 10 நாள்களாக மாணவர்களை ஏற்றுவதில்ல. பேருந்தில் எங்க கிராமத்துக்கான பெயர் பலகை இருந்துச்சு. இப்போ, அந்த பெயர் பலகையை எடுத்துட்டாங்க. வேலூர் பழைய பேருந்து நிலையத்துல இருந்து பெயர் பலகை இல்லாமத்தான் பேருந்து புறப்படுது.

டிராவல்ஸ் வேனில் அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்கள்

மாலை நேரத்துல வேலூர் பழைய பேருந்து நிலையத்துல காத்திருக்கும் மாணவ, மாணவிகள் பெயர் பலகை இல்லாம வரும் தங்கள் ஊர் பேருந்தை கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றமடைந்து நீண்ட நேரம் காத்திருக்கிறாங்க. ஓட்டுநரும், நடத்துனரும் `மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது’ என்ற ஒரே காரணத்திற்காக பாகாயம் வரை பெயர் பலகை இல்லாமலேயே பேருந்தை இயக்கி வராங்க. பாகாயம் வந்த பிறகுப் பெயர் பலகையை வைத்துக்கொண்டு மலை கிராமத்துக்குள் வராங்க. மாணவர்களுக்குப் பயனில்லாத பேருந்தை எதற்காக இயக்கணும். பேருந்து வசதியே இல்லாத எங்க மலை கிராமத்துக்கு மாணவர்களுடன் சேர்ந்து போராடிய பிறகே பேருந்து வசதி கிடைச்சது. இப்போ, அந்த பேருந்துகளில் மாணவர்கள் ஏற்றப்படுவதில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் மாணவர்களின் நலன் கருதி பேருந்து வசதி குறைகளை நிவர்த்திச் செய்யணும்’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அடுத்தகட்டம் நோக்கி நகரும் ரஷ்யா - உக்ரைன் போர்... விளைவுகள் எப்படி இருக்கும்?

ஆயிரம் நாள்களைக் கடந்தும் முடிவடையாமல் சென்றுகொண்டிருக்கிறது ரஷ்யா- உக்ரைன் போர். முன்பை விட மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் இந்த போரில், ரஷ்யா முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை ... மேலும் பார்க்க

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்ன... மேலும் பார்க்க

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க