செய்திகள் :

வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்

post image

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள ராமநாயிணி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் ( 55). விவசாயி. இவரின் மனைவி மல்லிகா. இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22) என்று மூன்று மகன்கள். ஜானகிராமன் அதே பகுதியில் `நர்சரி’ தோட்டம் அமைத்து, வருவாய் ஈட்டி வந்தார். இவரின் மூத்த மகன் விகாஷுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இப்போது அவருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.

மூத்த மகன் விகாஷும், இளைய மகன் ஜீவாவும் தந்தைக்கு உதவியாக நர்சரி தோட்டத்தை பராமரித்துவந்தனர். இன்னொரு மகன் லோகேஷ் மட்டும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைச் செய்து வருகிறார். இப்போது, லோகேஷும் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

மின்வேலியில் சிக்கி பலியான தந்தை மற்றும் 2 மகன்கள்

இந்த நிலையில், நேற்று இரவு தனது 3 மகன்களையும் அழைத்துகொண்டு ஜானகி ராமன் தோட்டத்துப் பக்கம் சென்றார். மகன்கள் 3 பேரும் ஒருப்பக்கமும், ஜானகி ராமன் வேறு பக்கமும் தோட்டத்தை சுற்றிவந்தனர். அப்போது, பக்கத்து விவசாய நிலத்தில் காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை கட்டுப்படுவதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஜானகி ராமன் அலறித் துடித்தார்.

தந்தையின் சத்தம் கேட்டு, 3 மகன்களும் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். அப்போது, அவர்களும் மின்சார தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில், லோகேஷ் மட்டுமே தூக்கிவீசப்பட்டார். சிறிதுநேரத்தில், தந்தை ஜானகி ராமன், மகன்கள் விகாஷ், ஜீவா ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இவர்களின் மரண ஓலம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து, மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த லோகேஷை மீட்டு அடுக்கம்பாறை பகுதியிலுள்ள அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சித்தரிக்கப்பட்ட படம்

இது குறித்து, தகவலறிந்ததும் வேப்பங்குப்பம் போலீஸார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் உயிரிழந்த இந்த கொடூரத் துயரச் சம்பவம், கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

US: `டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடா?' - காவல்துறை சொல்வது என்ன?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் பகுதியில் உள்ளது டவுன் சென்டர் மால். இந்த மாலில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29-ம் தேதி) துப்பாக்கிச் சூடு நடந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனால் ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ``திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளை'' - போலீஸ் விசாரணை

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருக்கிறார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி இவருடைய ... மேலும் பார்க்க

ஆணவக் கொலை செய்யப்பட்ட காதலன்; சடலத்துடன் திருமணம் செய்த காதலி - கலங்கிய கிராமம்

மகாராஷ்டிராவின் நான்டெட் பகுதியைச் சேர்ந்த சக்ஷம் டேட் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சல் என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆ... மேலும் பார்க்க

கோவை: 3 மணி நேரத்தில் 12 வீடுகளில் கொள்ளை; அடுக்குமாடி குடியிருப்பில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் வசித்து வருகிறார்கள். நேற்று அங்கு ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 12 வீடுகளில் நகை, பணம் கொள்ள... மேலும் பார்க்க

நீட் தேர்வில் மோசடி: '6 மாநிலங்கள்; ரூ.100 கோடி' - ஆள்மாறாட்டம் செய்த பொறியாளர் சிக்கியது எப்படி?

சமீபத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக செய்திகள் வெளியாகின. இந்த மோசடி வடமாநிலங்களில் அதிக அளவில் நடக்கின்றன. அது போன்ற ஒரு மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் ம... மேலும் பார்க்க

சேலம்: மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்ய முயன்ற சிறை காவலர் அதிரடி கைது

சேலம் மத்திய சிறையில் காவலர் மூலமாக செல்போன்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு வந்த நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கைதிகளை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.இ... மேலும் பார்க்க