செய்திகள் :

வேலை வாங்கி தருவதாக கூறி திருமணம்; சொன்ன சொல்லை காப்பாற்றாத கணவன் - கபடி வீராங்கனை விபரீத முடிவு

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் கிரன் சூரஜ்(29). இப்பெண் தேசிய அளவிலான கபடி வீராங்கனையாவார். மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் நிதி நெருக்கடியில் கஷ்டப்பட்டார். இதனை தெரிந்து கொண்ட ஸ்வப்னில் என்பவர் கிரனுக்கும், அவரது சகோதரனுக்கும் வேலை வாங்கித்தருவதாக கூறினார். அதோடு கிரன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.

இதனை கிரன் ஏற்றுக்கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு ஸ்வப்னிலை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் ஸ்வப்னில் சொன்னபடி கிரனுக்கோ அல்லது அவரது சகோதரனுக்கோ வேலை வாங்கிக்கொடுக்கவில்லை. இது குறித்து ஸ்வப்னிலிடம் கேட்டால் தாமதம் செய்து கொண்டே வந்தார். இது தொடர்பாக இருவருக்கும் சண்டை வந்தது.

இதனிடையே கிரனுடன் ஸ்வப்னில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள விரும்பியிருக்கிறார். ஆனால் வேலை கிடைத்த பிறகுதான் அனைத்திற்கும் சம்மதிப்பேன் என்று கிரன் கூறி வந்தார். இதனால் கிரனை ஸ்வப்னில் சித்ரவதை செய்து தொடங்கினர். எனவே கிரன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அப்படி இருந்தும் ஸ்வப்னில் தொடர்ந்து போன் மூலமும், மெசேஜ் மூலமும் மிரட்டிக்கொண்டிருந்தார். இதையடுத்து வேறு வழியில்லாமல் கிரன் விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்படி இருந்தும் கிரனை மிரட்டி மொபைல் போனில் ஸ்வப்னில் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தார்.

அந்த மெசேஜ்களை கிரன் சேமித்து வைத்துக்கொண்டார். ஸ்வப்னில் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததால் கிரன் தனது வீட்டில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு மூன்று நாள் சிகிச்சை அளித்தும் பலனலிக்காமல் கிரன் இறந்து போனார். கிரன் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்வப்னில் இப்போது தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தற்கொலை தடுப்பு மையம்

மறைந்த கணவர் தர்மேந்திராவிற்கு டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டம் - ஹேமமாலினி

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாத இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் தனது 89வது வயதில் காலமான நிலையில் தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் ஆகி... மேலும் பார்க்க

`ஒரே வீட்டில் இரண்டு சமையல்'- உணவில் வெங்காயம் பூண்டு சேர்க்காத மனைவி; விவாகரத்தில் முடிந்த பிரச்னை!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவர் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கேசவ் மனைவி உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் பயன்படுத்தாமல் சமையல் செய்ய ஆரம்பித... மேலும் பார்க்க

விமானத்தின் கழிப்பறை தண்ணீரே இல்லாமல் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?!

வீட்டில் நாம் பயன்படுத்தும் டாய்லெட்டில் தண்ணீர் தான் கழிவுகளை அடித்துச் செல்லும். விமானத்தில் தண்ணீர் இல்லை மாறாக காற்று தான் அந்த கழிவுகளை எடுத்துச் செல்கிறது. காற்று எப்படி கழிவுகளை எடுத்துச் செல்ல... மேலும் பார்க்க

பழைய கர்சீஃப்களை வைத்து இப்படியொரு சட்டையா? - இணையத்தை கலக்கும் ‘விண்டேஜ்’ டிசைன்!

ஃபேஷன் என்ற பெயரில் பல்வேறு விஷயங்களை செய்துவருகின்றனர். பழைய காலத்து ஆடைகளை நவீனமாக மாற்றுவதும், வித்தியாசமான பொருட்களை வைத்து ஆடைகளை வடிவமைப்பதும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், கைக்குட்... மேலும் பார்க்க