அரசமைப்புச் சட்ட பிரதி சேதம்: மகாராஷ்டிரத்தின் பா்பனியில் வன்முறை
ஸ்விக்கி பங்கு 4 சதவிகிதத்திற்கும் மேலாக சரிவு!
புதுதில்லி: முதலீட்டாளர்களுக்கான ஒரு மாத லாக்-இன் காலம் காலாவதியானதை அடுத்து, லாபத்தை முன்பதிவு செய்ய முயன்றபோது, உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் பங்குகள் இன்று 4 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது.
தேசிய பங்குச் சந்தையில், நிறுவனத்தின் பங்கு 4.46 சதவிகிதம் சரிந்து ரூ.519.50 ஆக முடிவடைந்தது. அதே வேளையில் மும்பை பங்குச் சந்தையில் ஸ்விக்கியின் பங்கு விலையானது 3.84% குறைந்து ரூ.522.70 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு; ஐ.டி. மற்றும் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!
லாக்-இன் காலாவதியானதைத் தொடர்ந்து, முதலீட்டாளர் ஆங்கர் உடைய 6.5 கோடி ஸ்விக்கி பங்குகள் இன்று முதல் வர்த்தகம் செய்ய தகுதி ஆன நிலையில், மீதமுள்ள 50 சதவிகித பங்குகளின் லாக்-இன் காலம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதியுடன் முடிவடையும் என்று தெரியவந்துள்ளது.
இன்று ஸ்விக்கியின் 1.43 கோடி பங்குகள் என்.எஸ்.இ-யில் வர்த்தகமான நிலையில், 6.51 லட்சம் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் கைமாறியது.
கடந்த மாதம், ஸ்விக்கி பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டபோது கிட்டத்தட்ட 17 சதவிகித பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.