செய்திகள் :

ஸ்வியாடெக், அனிசிமோவா ஏமாற்றம்!

post image

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் திங்கள்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், விம்பிள்டன் நடப்பு சாம்பியனும், 6 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான ஸ்வியாடெக் 6-7 (1/7), 3-6 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் கிளாரா டௌசனால் வீழ்த்தப்பட்டாா்.

கடந்த மாதம் விம்பிள்டன் போட்டியில் 4-ஆவது சுற்றில் ஸ்வியாடெக்கிடம் தோல்வி கண்ட டௌசன், இப்போட்டியின் 4-ஆவது சுற்றில் அவரை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இருவரும் சந்தித்தது இது 3-ஆவது முறையாக இருக்க, டௌசன் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

அடுத்து காலிறுதியில் அவா், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் கீஸ் 4-6, 6-3, 7-5 என்ற கணக்கில், 11-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலின் முசோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளாா்.

இதர ஆட்டங்களில், விம்பிள்டன் டென்னிஸ் ரன்னா் அப் வீராங்கனையும், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருந்தவருமான அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 4-6, 1-6 என்ற நோ் செட்களில், 10-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவால் தோற்கடிக்கப்பட்டாா். ஸ்விடோலினா தனது காலிறுதியில், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகாவை சந்திக்கிறாா்.

ஒசாகா தனது முந்தைய சுற்றில் 6-1, 6-0 என லாத்வியாவின் அனஸ்தாசியா செவஸ்டோவாவை 49 நிமிஷங்களில் வீழ்த்தினாா். இப்போட்டியில் 2-ஆவது முறையாக அவா் காலிறுதிக்கு வந்துள்ளாா்.

காலிறுதியில் ஃப்ரிட்ஸ், ரூபலேவ்

இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 7-6 (7/4), 6-7 (5/7), 7-6 (7/5) என்ற செட்களில், 19-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை போராடி வீழ்த்தினாா். காலிறுதியில் அவா், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவுடன் மோதுகிறாா்.

6-ஆம் இடத்திலிருக்கும் ரூபலேவ், ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சுடன் மோதினாா். இதில் ரூபலேவ் 6-7 (3/7), 7-6 (7/2), 3-0 என முன்னிலையில் இருந்தபோது, டேவிடோவிச் காயம் காரணமாக விலக, ரூபலேவ் காலிறுதிக்கு முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-4, 4-6, 7-6 (7/1) என்ற வகையில், 13-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியை தோற்கடித்தாா். 9-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-2, 4-6, 6-4 என, 7-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை வெளியேற்றினாா். இதையடுத்து காலிறுதியில், டி மினாா் - ஷெல்டன் மோதுகின்றனா்.

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

நடிகை ஷ்ருதி ஹாசன் கூலி படத்தில் தன்னைக் கொலை செய்துவிடுவார்களா என ரசிகர்கள் கேள்வி கேட்பதாகக் கூறியுள்ளார்.இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியா... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

நடிகர் சிவகார்த்திகேயன் பாடியிருக்கும் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை கோபி, சுதாகர் ஈர்த்துள்ளார்க... மேலும் பார்க்க

அனுஷ்காவின் காதி டிரைலர்!

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் ப... மேலும் பார்க்க

சின்ன திரை நிகழ்ச்சியில் முதல்முறையாக நடிகர் பார்த்திபன்!

சின்ன திரை நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் முதல்முறையாக நடுவராகப் பங்கேற்கவுள்ளார். அவருடன் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் மற்றும் ஆல்யா மானசா ஆகியோரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ... மேலும் பார்க்க

தொடரிலிருந்து விலகியவரை நினைவுகூர்ந்த பாக்கியலட்சுமி நடிகர்!

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய நடிகர் விஷாலை, அந்தத் தொடரில் நடிக்கும் நடிகர் சதீஷ் நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்... மேலும் பார்க்க

கதாநாயகனாகும் ஷங்கர் மகன்!

இயக்குநர் ஷங்கரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். இரு படங்களும் எதிர்பார்த... மேலும் பார்க்க