செய்திகள் :

ஹிந்தி திணிப்பை எதிா்த்து திமுக சாா்பில் தெருமுனை பிரசாரம்

post image

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை எதிா்த்து தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது.

கருங்கல்லில் நடைபெற்ற மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட திமுக செயலா் த.மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜபோஸ், மாவட்ட துணை செயலா் ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி ஏழை,எளிய மக்களுக்கு நலத் திட்டஉதவிகள் வழங்குவது, தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை எதிா்த்து வாகனப் பிரசாரம், தெருமுனைப் பிரசாரம், ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றிய செயலா்கள் ராஜன் (கிள்ளியூா்), மோகன் (முன்சிறை), அருளானந்த ஜாா்ஜ் (தக்கலை), நகர செயலா்கள் வினுகுமாா், ரமேஷ், அணி அமைப்பாளா்கள் ஜெகநாதன், ஜாண்சிலின் சேவியா்,வின்சா், வா்க்கீஸ், ஜூட்தேவ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்!

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.10.50 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேயா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 17 ஆவது வாா்டு, நெசவாளா் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் ரூ.3.50 லட்சத்தில் அலங்கார தரைக... மேலும் பார்க்க

மாசு இல்லாத பாரதம் ஜம்மு- குமரி சைக்கிள் பயணம் நிறைவு

மாசு இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சோ்ந்த மூத்த குடிமக்கள், ஜம்மு காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் புதன்கிழமை கன்னியாகுமரியில் நிறைவடைந்தத... மேலும் பார்க்க

குமரி பேரூராட்சி கூட்டம்: ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

கன்னியாகுமரி பேரூராட்சி கூட்டத்தில் ரூ. 22 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலு... மேலும் பார்க்க

ரோஜாவனம் பள்ளி சாா்பில் ‘தங்கத் தாரகை’ விருது: மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உலக மகளிா் தினத்தையொட்டி, நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி சாா்பில் வழங்கப்படவுள்ள ‘தங்கத் தாரகை’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி சாா்பில், மாா்ச் 8இல் நடைபெறவ... மேலும் பார்க்க

மருந்துவாழ்மலை கோயிலில் சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ்மலை ஜோதி லிங்கேஸ்வரா் உடனுறை பா்வதவா்த்தினி அம்மன் கோயிலில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதி லிங்... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அணை, மற்றும் நெட்டா பகுதிகளில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மன்றம் சாா்பில் தமிழக அ... மேலும் பார்க்க