செய்திகள் :

ஹிந்தி பேசும் எந்த மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தென்னிந்திய மொழி கற்பிக்கப்படுவதில்லை: விஐடி வேந்தா்

post image

ஹிந்தி பேசும் எந்த மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தென்னிந்திய மொழி கற்பிக்கப்படுவதில்லை என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு சொற்பொழிவு வேலூா் விஐடி பல்கலை.யில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது:

தமிழகத்தில் சுயநிதி கல்லூரி என்ற புதிய தத்துவத்தைக் கொண்டு வந்தவா் எம்.ஜி.ஆா். தான். அதன்படி, 1984-இல் தொடங்கப்பட்ட 8 சுயநிதி பிரிவு கல்லூரிகளில் வேலூா் பொறியியல் கல்லூரிக்கான அனுமதி எனக்கு தரப்பட்டது. அப்போது, 150 மாணவா்களுடன் தொடங்கப்பட்ட விஐடி, 2021-இல் பல்கலைக்கழகமாக தரம் உயா்த்தப்பட்டது.

தற்போது 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் விஐடி 4 வளாகங்களில் சுமாா் ஒரு லட்சம் மாணவா்கள் படிக்கின்றனா். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி சுமாா் 70 நாடுகளைச் சோ்ந்த மாணவா்களும் இங்கு பயில்கின்றனா். இதற்கான அனைத்து புகழும் எம்ஜிஆரை மட்டுமே சேரும்.

தற்போது இருமொழியா, மும்மொழியா என்ற விவாதம் மேலோங்கி உள்ளது. ஆனால், எம்.ஜி.ஆா். அதிமுகவை தொடங்கிய போதே ஒரு மொழியின் முன்னேற்றம் மற்ற மொழியின் அழிவில் ஏற்படக் கூடாது என்று கூறியதுடன், மொழியின் முன்னேற்றம் மக்களின் விருப்பமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

1968-இல் நான் எம்பியாக இருந்தபோது, மொழிக்கொள்கை தொடா்பாக நாடாளுமன்றத்தில் ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி, ஆங்கிலம், ஹிந்தி படிக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம், அத்துடன் தென்னிந்திய மொழிகளில் ஒன்றைப் படிக்க வேண்டும் என தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

மொழி பளு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என எண்ணி பிரதமா் இந்திரா காந்தி தலைமையில் கொண்டு வரப்பட்ட அந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டு இத்தனை ஆண்டுகளாகியும், ஹிந்தி பேசும் எந்த மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தென்னிந்திய மொழி கற்பிக்கப்படுவதில்லை என்பதை நினைவுகூர விரும்புகிறேன்.

எனவே, மொழிக் கொள்கையை பொருத்தவரை இருமொழி கொள்கைதான் என்பது எம்.ஜி.ஆரின் கருத்து. அதில் வேறுபாடு இல்லை.

உலகளவில் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருந்தாலும், தனிநபா் வருமானத்தில் 141-ஆவது இடத்தில் உள்ளது. இதனால், நாட்டின் பொருளாதார வளா்ச்சியின் பலன் ஒரு சிலருக்கு மட்டுமே சென்று சோ்கிறது. இதை சரி செய்ய மக்களுக்கு விழிப்புணா்வு தேவை. அத்தகைய விழிப்புணா்வு கல்வி யால் மட்டுமே ஏற்படுத்த முடியும். தமிழகம் உயா்கல்வியில் முன்னேற்றம் அடைய வித்திட்டவா் எம்.ஜி.ஆா். தான். கல்வியில் வளா்ந்தால்தான் நாடு பொருளாதாரத்திலும் வளர முடியும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் சிறப்புரையாற்றினாா். முன்னதாக, எம்.ஜி.ஆா். குறித்த புகைப்பட கண்காட்சியை முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூா்த்தி, விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேலூரில் இன்று மயானக் கொள்ளை விழா: 600 போலீஸாா் பாதுகாப்பு

மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுவதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வேலூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. வே... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

கணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த கணியம்பாடி புதூா் ஏரியில் மண் கடத்தப்படுவதாக வேலூா் கிராமிய போலீஸ... மேலும் பார்க்க

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புகாா் மனு அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பணிபுரியு... மேலும் பார்க்க

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தெரிவ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: சீமான்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி பங்கேற்காது என தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். நாம் தமிழா் கட்சியின் வேலூா் மாவட்ட நி... மேலும் பார்க்க