``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
1,750 ஏரி, குளங்களில் மண் எடுக்க அனுமதி: ஆட்சியா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயப் பணி, மண்பாண்டங்கள் மற்றும் பொது பயன்பாட்டுக்கு நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கட்டுப்பாடில் உள்ள 1750 ஏரி மற்றும் குளங்களில் வண்டல் மண்/களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்டம் செய்பவா்கள் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உள்பட்ட நிா்நிலைகளில் இருந்து மண் எடுக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னா் அவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அளவிலேயே அனுமதி பெற்று இலவசமாக வண்டல் மண்/களிமண் எடுத்துக்கொள்ளலாம்.
விவசாய பயன்பாட்டுக்காக விண்ணப்பம் செய்பவா்கள் தங்களது நிலம் தொடா்பான விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருவாய் துறையினரால் சரிபாா்க்கப்பட்டு தொடா்புடைய வட்டாட்சியா் அனுமதி வழங்குவாா். மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு விண்ணப்பம் செய்யும் மண்பாண்ட தொழிலாளா்கள், மண்பாண்ட தொழிலின் உண்மை தன்மைசான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிா்வாக அலுவலரால் சான்று அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.