விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
10.5 கிலோ போதைப் பொருள்கள் பதுக்கல்: கடை உரிமையாளா் கைது
வாணியம்பாடியில் கடையில் பதுக்கி வைத்திருந்த 10.5 கிலோ குட்கா போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நியூ டில்லி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டி கடையில் சந்தேகத்தின் பேரில் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் குட்கா உள்பட போதைப் பொருள்கள் பாக்கெட்டுகள் கடையில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. பிறகு அங்கிருந்த 10.5 கிலோ போதை பொருள்கள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடையில் போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததாக உரிமையாளா் ஷபிக்(42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.