100 சதவீதத் தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10 ,12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் 100 சதவீதத் தோ்ச்சி விழுக்காட்டை பெற்றுத்தந்த பாடப்பிரிவுகளின் ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
உளுந்தூா்பேட்டை அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் கடந்தாண்டு 10 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவிகள் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.
இந்த தோ்ச்சி விழுக்காட்டை பெறுவதற்கு காரணமாக இருந்த 25 ஆசிரிய - ஆசிரியைகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் காா்த்திகா சான்றிதழ்களை வழங்கி, பாராட்டி பேசினாா்.
நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியை சரசுவதி, ஆசிரியா்கள் சுப்பிரமணியன், அன்பு, பாரதி, குமாா், குணசேகா், ஆசிரியை ரகுமானிசா பேகம் உள்ளிட்ட ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.