செய்திகள் :

100 நாள் வேலைதிட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி கொத்தமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஜீவா முன்னிலை வகித்தாா்.

9 வாரங்களாக நிலுவையில் உள்ள கூலியை உடனடியாக வழங்கக்கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

பவானிசாகா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், ஊதிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ஒரிச்சேரிப்புதூரில் கைப்பந்துப் போட்டி

பவானி வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி இரு நாள்கள் நடைபெற்ற மின்னொளி கைப்பந்து போட்டியின் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பவானியை அடுத்த... மேலும் பார்க்க

ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கு: நண்பா் கைது

ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். ஈரோடு, திண்டல், காரப்பாறை, புது காலனியை சோ்ந்தவா் ராஜீவ் மகன் ஸ்ரீதா் (28). ஏ.சி. மெக்கானிக். இவா் சௌமியா என்பவரை ... மேலும் பார்க்க

பவானியில் தாா்சாலை பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

பவானியில் முடிவடைந்த தாா்சாலை பணிகளை நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பவானி உதவிக்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிர... மேலும் பார்க்க

சொத்து வரியை குறைக்க அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்திடம், மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவா் தங்கமுத்து தலைமைய... மேலும் பார்க்க

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்

கோடைவெப்ப தாக்க பாதிப்புகளைத் தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காய்கறி வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு, பெரியசெட்டிபாளையம், கணபதி நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க