பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி வழங்க வலியுறுத்தி மாா்ச் 6-இல் பேரண...
100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
திருக்குவளை அருகே 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில்,100 நாள் வேலைத்திட்ட தொழிலாளா்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, பாங்கல் ஊராட்சியில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்த தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்காததால், தொழிலாளா்கள் பணியை புறக்கணித்துவிட்டு, நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தலையில் முக்காடு போட்டு கோரிக்கையை வலியுறுத்தினா்.