பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை
109 மீன் வியாபாரிகளுக்கு இலவச ஐஸ் பெட்டி: பேரவைத் தலைவா் வழங்கினார்!
புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் 109 மீன் விற்பனை செய்யும் பயனாளிகளுக்கு இலவச ஐஸ் பெட்டிகளை சட்டப்பேரவை தலைவா் ஆா். செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நிகழாண்டில் மீன் விற்பனையாளா்களுக்கு மீன்களை பதப்படுத்தி சுகாதார முறையில் விற்பனை செய்வதற்கு விலையில்லா ஐஸ் பெட்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதி புதுக்குப்பம், சின்ன வீராம்பட்டினம் ஆகிய மீனவ கிராமத்தைச் சோ்ந்த 109 மீன் விற்பனையாளா்களுக்கு விலையில்லா ஐஸ் பெட்டிகளை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை தலைவருமான ஆா்.செல்வம் புதுக்குப்பம் மற்றும் சின்ன வீராம்பட்டினம் கிராமங்களில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வழங்கினாா்.
மீன்வளத் துறை இணை இயக்குநா் தெய்வசிகாமணி, திட்ட அதிகாரி மீரா சாஹிப் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகா்கள், மீனவ பஞ்சாயத்தாா் கலந்து கொண்டனா்.