ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது
125ஆவது ஆண்டில் பார்சிலோனா..! மெஸ்ஸி கூறியது என்ன?
உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் ஸ்பெயினில் உள்ள எஃப்சி பார்சிலோனா அணிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இந்தக் கால்பந்து கிளப் அணி 1899ஆம் ஆண்டு நவ.29ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
பார்சிலோனா அணி உள்ளூர் போட்டிகளில் 77 கோப்பைகளும் சர்வதேச போட்டிகளில் 22 கோப்பைகளையும் வென்றுள்ளது.
சமூக வலைதளங்களில் அதிகமாக பின்பற்றப்படும் ஒரு அணியாகவும் பார்சிலோனா இருக்கிறது. பேலன்தோர் விருதுகளை அதிகம் முறை வென்றவர்களும் இந்த அணியில் இருக்கிறார்கள்.
தற்போதைய லா லீகா தொடரில் பார்சிலோனா அணி 34 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பார்சிலோனாவில் மெஸ்ஸி
2004 முதல் 2021 வரை மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக விளையாடியுள்ளார். 474 கோல்கள் இந்த அணியில் விளையாடி அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 17 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மெஸ்ஸியின் ஊதியம் பார்சிலோனா அணியின் குறிப்பிட்ட சதவிகிதத்தைவிட (விதி) அதிகமாக இருப்பதால் அவரது ஒப்பந்தத்தை நிராகரித்தது. மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
பார்சிலோனா அணிக்காக அதிக முறை (778) விளையாடியவர்களில் லயோனல் மெஸ்ஸி முதலிடத்தில் இருக்கிறார். அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலிலும் மெஸ்ஸி இருக்கிறார்.
மெஸ்ஸியின் வாழ்த்து
இந்த நிலையில் 125ஆவது ஆண்டு விழா காலாவில் விமர்சியாக நடைபெறவுள்ளது. இதில் 2,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இது குறித்து மெஸ்ஸி வாழ்த்து தெரிவித்துள்ளார். மெஸ்ஸி கூறியதாவது:
125ஆவது ஆண்டுக்கு வாழ்த்துகள். பார்சிலோனா அணியில் விளையாடியதுக்கும் அதன் ரசிகனாக இருப்பதற்கும் மிகப்பெரிய கர்வமாக இருக்கிறது.
மற்ற கிளப்புகளைவிட வித்தியாசமானது, சிறந்தது பார்சிலோனா. கடவுள் உதவியினால் இந்த அணியில் விளையாடியதும் எனது பெரும்பாலான காலத்தை இந்த அணியில் செலவிட்டதுக்கும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
பார்சிலோனா அணியை, அந்த நகரத்தை, அந்த மக்களை, அவர்களின் அன்பினை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். நம் இந்த அணிக்காக உழைத்து அதனை இன்னும் பெரிய அணியாக மாற்ற வேண்டும் என்றார்.