ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்
15 வயது சிறுமியை தீ வைத்து கொல்ல முயற்சி: ஒடிசாவில் அதிர்ச்சி!
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுமி ஆபத்தான நிலையில் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்குப் பொறுப்பான துணை முதல்வர் பிரவதி பரிதா, இந்த சம்பவத்தை எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளார். புரி மாவட்டத்தில் உள்ள பலங்காவில் மர்ம நபர்கள் சிலர் சாலையில் நடந்துசென்ற 15 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த செய்தியைக் கேட்டு வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
சிறுமி புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார், அவருக்குத் தீவிர சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
பயாபர் கிராமத்தில் சிறுமி தோழியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, மூர்ம மர்ம நபர்கள் சிறுமியை தீ வைத்து எரித்ததாகவும், சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீஸாரிடம் விளக்கினர்.
போலீஸார் சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.