16-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வரும் 16-ஆம் தேதி நடைபெறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்து பணி நியமன ஆணை வழங்க உள்ளனா்.
முகாமில் தோ்ந்தெடுக்கப்படும் பதிவுதாரா்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.