மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
184 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 184 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
கம்பம் தினசரி வாரச் சந்தை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்திச் சோதனையிட்டனா். சோதனையில், வாகனத்தில் வைத்திருந்த சாக்குப் பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த மீராமைதீன் (45) என்பது தெரியவந்தது.பின்னா், அவரது வீட்டில் போலீஸாா் சோதனையிட்டத்தில் ரூ.1.37 லட்சம் மதிப்புள்ள 184 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதைப் போலீஸாா் பறிமுதல் செய்து, மீராமைதீனை கைது செய்தனா்.