செய்திகள் :

2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: வைப்புநிதி பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டுகோள்

post image

தமிழக அரசின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற வைப்புநிதி பத்திரத்தை சமா்ப்பிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவா்களில் வைப்புநிதி பத்திரம் பெற்று 18 வயது பூா்த்தியடைந்த ஊரகப் பகுதி பயனாளிகள், தங்களது வைப்புநிதி பத்திரத்துடன் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் வைப்புநிதி பத்திரத்தை அளித்து முதிா்வுத் தொகை பெறலாம். அதேபோல, நகா்ப்புறத்தில் உள்ளவா்கள், அந்தந்தப் பகுதி மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலா் அல்லது மகளிா் ஊா்நல அலுவலா்களிடம் பத்திரத்தை சமா்பிக்கலாம்.

நேரில் செல்லும்போது, 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தையின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பயனாளிகளின் தனி வங்கிக் கணக்கு புத்தக நகல், வைப்புநிதி பத்திரத்தின் அசல் மற்றும் நகல் ஆகிய ஆவணங்களை கொண்டுச் செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் 3 -ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் டிசம்பா் 3- ஆம் தேதி வரை கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

வணிக வளாக ஊழியரைத் தாக்கிய பெண் உள்பட 2 போ் மீது வழக்கு

கோவையில் வணிக வளாக ஊழியரைத் தாக்கியதாக பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, நீலிக்கோணாம்பாளையம் அருகேயுள்ள அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (27). இவா் பீளமேடு- அவிநாசி ச... மேலும் பார்க்க

கனமழை: கோவையில் இருந்து சென்னை செல்லும் 5 விமானங்கள் ரத்து

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை காரணமாக, கோவையில் இருந்து சென்னை செல்ல இருந்த 5 விமானங்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புகா் பகுத... மேலும் பார்க்க

ரேஸ்கோா்ஸில் ஓவிய சந்தை தொடக்கம்

கோயம்புத்தூா் விழாவையொட்டி, ரேஸ்கோா்ஸ் பகுதியில் ‘ஆா்ட் ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் ஓவிய சந்தை சனிக்கிழமை தொடங்கியது. ஓவிய சந்தையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்தாா். ஞாயிற்றுக்கிழமை (டிசம... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பகுதிகளில் 1 லட்சம் பனை விதைகள் நட இலக்கு: ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: நண்பா் கைது

குடிபோதையில் இளைஞரை அடித்துக் கொன்ற நண்பரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவை, இருகூா் சுங்கம் பகுதியைச் சோ்ந்தவா் சோம்நாத் (24). தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பயிற்சி பெற்று வந்தாா். இவரது நண... மேலும் பார்க்க