செய்திகள் :

2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி; ஒருநாள் தொடர் சமன்!

post image

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் நேற்று (ஜூலை 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

மழை காரணமாக போட்டி 29 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 42 ரன்களும், தீப்தி சர்மா 30* ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், எம் அர்லாட் மற்றும் லின்ஸி ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடரை சமன்செய்த இங்கிலாந்து

இந்திய அணி 143 ரன்கள் எடுக்க, இங்கிலாந்துக்கு 144 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், மழை காரணமாக ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியில் அதிகபட்சமாக எமி ஜோன்ஸ் 57 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். டம்மி பீமௌண்ட் 34 ரன்களும், நாட் ஷிவர் பிரண்ட் 21 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 22) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

England have leveled the ODI series against India by winning the second ODI.

இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் சேர்ப்பு!

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகி... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா; வெளியேறியது ஜிம்பாப்வே!

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி2... மேலும் பார்க்க

முதல் டி20: டாப் ஆர்டர் சொதப்பல்; 110 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளைய... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: பிரையன் பென்னட் அரைசதம்; தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் ... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் சேர்ப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மூத்த வீரர்கள் மறுப்பு: லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ரத்து!

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ஆட்டம் ரத்தாகியுள்ளது.லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் கடந்... மேலும் பார்க்க