ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
2 மாதங்களில் 1 லட்சம் சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றம்: தில்லி மாநகராட்சி நடவடிக்கை
பொது இடங்களின் முகப்பு அழகு சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பல்வேறு மண்டலங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றியுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
இது தொடா்பான ஒரு அறிக்கையின்படி, மேற்கு மண்டலம் மூலம் 41,000-க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், 2,812 பதாகைகள் மற்றும் 4,733 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன.
கரோல் பாக் மண்டலம் 14,922 சுவரொட்டிகள் மற்றும் 3,209 பதாகைகளை அகற்றியது. தெற்கு, கேசவ்புரம் மற்றும் மேற்கு மண்டலங்களும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன.
ஷாதாரா வடக்கு 4,852 பதாகைகளையும், தெற்கு மண்டலம் 13,794 சுவரொட்டிகளையும் அகற்றியுள்ளது.
நரேலா, சென்ட்ரல் மற்றும் நஜாஃப்கா் போன்ற பிற மண்டலங்களிலும் கணிசமான அளவு தூய்மைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆயிரக்கணக்கான சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டன.
அதேவேளையில், மத்திய மண்டலத்தில் குறைந்தபட்ச அளவில் புறத்தோற்ற அழகு சிதைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் 159 சுவரொட்டிகள் மற்றும் 42 விளம்பரப் பலகைகள் மட்டுமே அகற்றப்பட்டன.
இது தொடா்பான அறிக்கையின்படி, மண்டல சுகாதாரம் உரிமப் பிரிவுகள் முகப்பு அழகு சிதைக்கப்பட்டவற்றை அகற்றுதல் அல்லது சரிசெய்தல் மற்றும் விதிகள் மீறுபவா்களுக்கு அபராதம் விதித்தல் ஆகிய நடவடிகைகளை எடுத்து வருகின்றன.
பராமரிப்புப் பிரிவு, முகப்பு சிதைக்கப்பட்ட சுவா்களை மீண்டும் வண்ணம் தீட்டுதல் மற்றும் சுவரோவியங்கள் மற்றும் அழகுபடுத்தல் திட்டங்களுக்கான பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆா்) முன்முயற்சிகளின் கீழ் நிதியைப் பெறுதல் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நகா்ப்புற முகப்பு சிதைவின் எதிா்மறையான தாக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தில்லி மாநகராட்சி வழக்கமான தகவல், கல்வி மற்றும் தொடா்பு நடவடிக்கைகளையும் நடத்தி வருகிறது.
மண்டல துணை ஆணையா்களால் சாலைகள் மற்றும் பொது இடங்களில் ஆய்வுகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி முதல்வா் ரேகா குப்தாவிடம் ஒரு மறுஆய்வுக் கூட்டத்தின்போது வழங்கப்பட்ட தரவுகளின்படி,
100க்கும் மேற்பட்ட பதாகைகள் தில்லி மாநகராட்சியால் ரத்து செய்யப்பட்டன.