விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
2025 நவம்பரில் இந்தியாவில் உலக குத்துச்சண்டை இறுதிப் போட்டி
வரும் 2025 நவம்பா் மாதம் இந்தியாவில் உலக குத்துச்சண்டை இறுதிப் போட்டி (ஃபைனல்ஸ்) மற்றும் உலக குத்துச்சண்டை சம்மேளன மாநாடு நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (பிஎஃப்ஐ) தலைவா் அஜய் சிங் கூறியது:
இந்தியாவில் 2025-ம் ஆண்டு உலகக் கோப்பை குத்துச் சண்டை இறுதிப் போட்டி, உலக குத்துச்சண்டை மாநாடு ஆகியவற்றை நடத்துவதற்கான உரிமையைப் பெற்றுள்ளோம்.
இறுதிப் போட்டியானது, தரவரிசைப் போட்டியாக அமைந்துள்ளது. மேலும், 2025-ல் நடைபெறவுள்ள 3 உலக குத்துச்சண்டை கோப்பை போட்டிகளின் இறுதிக்கட்ட போட்டியாகவும் இது அமையவுள்ளது.
உலக குத்துச்சண்டை காங்கிரஸ் எனப்படும் நிா்வாகிகளின் மாநாடும் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் உலகக் குத்துச்சண்டை சம்மேளனத்தின் பங்குதாரா்கள், அதிகாரிகள், உலகில் உள்ள பல்வேறு குத்துச்சண்டை சம்மேளனங்களின் நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா். இந்த மாநாட்டின்போது, குத்துச்சண்டை விளையாட்டின் பல்வேறு முக்கியமான வளா்ச்சிகள், உத்திகள், எதிா்காலத்தில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகள் குறித்து விவாதிக்கப்படும் என்றாா்.