செய்திகள் :

2025-ல் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்கள்!

post image

புதுதில்லி: 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வெறும் கவனத்தை ஈர்ப்பதை விட அதிகமான டெக் செயல்திறன் உள்ளடக்கியது.

தினசரி பயன்பாடு, நீண்ட பயணங்கள் மற்றும் மாறிவரும் சாலை நிலைமைகளை எளிதில் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போதைய பிராண்டுகள் வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. நவீன பைக்குகள் அம்சங்களால் நிரம்பியுள்ள நிலையில் அவை பெரும்பாலும் விலை உயர்ந்தவை. எனவே அவற்றை காப்பீடு செய்வது விவேகமானது.

ஒரு சில புதிய மாடல்கள் அவற்றின் தோற்றம், செயல்திறன் மற்றும் நடைமுறைத்தன்மைக்காக கவனத்தை ஈர்க்கின்றன.

ட்ரெண்டிங்கில் உள்ளவற்றைத் தாண்டி, அடிப்படைகளைப் புரிந்துகொள்வதற்கும் இது உதவுகிறது. இஞ்சின் விவரக்குறிப்புகள், விலை, தனித்துவமான அம்சங்கள் மற்றும் பைக் காப்பீடு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

1. ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350

விலை: 1.73 முதல் 2.07 லட்சம் (தோராயமாக)

ஹண்டர் 350 இளம் தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. போக்குவரத்தை நன்றாகக் கையாளும் திறன் படைத்தது. இதில் வழங்கப்பட்டுள்ள 350 சிசி இஞ்சின் நல்ல மைலேஜ் வழங்கும்.

• எஞ்சின்: 349.34 சிசி

• மைலேஜ்: தோராயமாக. 36 கிமீ/லி

• பவர்: 20.2 பிஹெச்பி

2. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350

விலை: 2.22 – 2.34 லட்சம் (தோராயமாக)

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் செயல்திறனை பொறுத்தவரையில், 350 சிசி சிங்கிள் சிலிண்டர் ஃப்யூயல் இன்ஜெக்டட் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.20 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

• எஞ்சின்: 350 சிசி

• மைலேஜ்: சுமார் 35 கிமீ/லி

3. ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650

விலை: 3.72 முதல் 4.01 லட்சம் (தோராயமாக)

ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் 648சிசி இன்லைன் ட்வின்-சிலிண்டர் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7250 ஆர்பிஎம்-ல் 34.9 kW பவர் அவுட்புட்டையும், 5150 ஆர்பிஎம்-ல் 52.3 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

இந்த இஞ்சின் 6-ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸுடன் வருகிறது. இது சிறந்த பவர் டெலிவரி மற்றும் மென்மையான பயண அனுபவத்தை வழங்கும்.

• எஞ்சின்: 648 சிசி

• மைலேஜ்: 25 கிமீ/லி

• பவர்: 47 பிஹெச்பி

4. யமஹா எம்டி 15 வி2

விலை: 2.03 – 2.09 லட்சம் (தோராயமாக)

எம்டி 15 வி2 சுறுசுறுப்பானது, ஆக்ரோஷமானது மற்றும் செயல்திறனுக்காக உருவாக்கப்பட்டது. சுறுசுறுப்பான கையாளுதல் மற்றும் மேம்பட்ட அம்சங்கள் ஆகியவற்றின் கலவைக்கு பெயர் பெற்றது. இது மோட்டார் சைக்கிள் பைக் ஆர்வலர்களிடையே பிரபலமான தேர்வாக உள்ளது.

• எஞ்சின்: 155 சிசி

• மைலேஜ்: சுமார் 49 கிமீ/லி

• பவர்: 18.1 பிஹெச்பி

5. யமஹா ஆர்15 வி4

விலை: 2.20 – 2.30 லட்சம் (தோராயமாக)

ஸ்போர்ட்டி வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுக்கு பெயர் பெற்ற இந்த பைக். தினசரி பயணம் மற்றும் வார இறுதி பயணம் மேற்கொள்ள ஒரு சிறந்த தேர்வாகும்.

சாலைகளில் சிறந்த தெரிவுநிலைக்காக யமஹா ஆர்15 வி4 மேம்பட்ட எல்.ஈ.டி. லைட்டிங் அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் பிரகாசமான வெளிச்சத்தை வழங்கும் வகுப்பு 'டி' இரு- செயல்பாட்டு கொண்ட ஹெட்லைட் யூனிட்டைக் கொண்டுள்ளது.

பைக்கைப் பற்றி மேலும்:

• மைலேஜ்: சுமார் 51.4 கிமீ/லி

• பவர்: 18.1 bhp

6. ஹோண்டா எஸ்.பி. 125

விலை: 1.08 – 1.17 லட்சம் (தோராயமாக)

ஹோண்டா எஸ்பி 125 பைக்கின் திறமையான செயல்திறன், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுக்காக அறியப்பட்ட பைக் ஆகும்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்க ஏற்றது. அன்றாட பயணம் மேற்கொள்வோருக்கு எளிதாக்கும் அம்சங்களுடன் வருகிறது. இந்த பைக் மாணவர்கள் அல்லது முதல் முறையாக பைக் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

• எஞ்சின்: 123.94 சிசி

• மைலேஜ்: தோராயமாக. 63 கிமீ/லி

• பவர்: 10.72 பிஎச்பி

7. ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350

விலை: 2.00 – 2.49 லட்சம் (தோராயமாக)

ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில், சக்தி வாய்ந்த 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் மெதுவான, சக்திவாய்ந்த மற்றும் கவனத்தை ஈர்க்கும் பயணத்தை விரும்பினால் இது அனைத்து வகையிலும் வலு சேர்க்கும்.

பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

8. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர்

விலை: 1.13 – 1.17 லட்சம் (தோராயமாக)

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R, இன்னும் கொஞ்சம் நேர்த்தியை விரும்பும் அன்றாட பயணம் செய்பவர்களுக்கானது. ஸ்டைலுடன் செயல்திறனை சமநிலைப்படுத்துகிறது.

எல்.ஈ.டி. விளக்குகள், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஸ்டெப் இருக்கைகள் ஆகிய அம்சங்களை வழங்குகிறது. தினமும் பயணம் செய்பவர்களுக்கும், திறமையை விரும்புபவர்களுக்கும் இது ஒரு ஸ்மார்ட் விருப்பமாகும்.

• எஞ்சின்: 125 சிசி

• அம்சங்கள்: ஐபிஎஸ், எல்இடி விளக்குகள், ஸ்பிளிட் இருக்கை (வேரியன்ட் வாரியாக).

ஜூனில் வீழ்ச்சியடைந்த தங்கம் விற்பனை

தங்கத்தின் அதிக மற்றும் ஏற்ற இறக்கமான விலைகள் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் அதன் விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இது, கரோனா நெருக்கடிக்குப் பிறகு தங்கம் விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகும... மேலும் பார்க்க

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,351 கோடியாக உயா்வு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவின் செயல்பாட்டு வருவாய் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.13,351 கோடியாக அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வ... மேலும் பார்க்க

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 78% உயர்வு!

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 78 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்க... மேலும் பார்க்க

விப்ரோ: முதல் காலாண்டு வருவாய் 3% அதிகரிப்பு!

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்ததையடுத்து, ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் இன்று உயர்ந்து முட... மேலும் பார்க்க

பந்தன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் சரிவு!

கொல்கத்தா: தனியார் துறை கடன் வழங்குநரான பந்தன் வங்கி, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் வணிகத்தின் மீதான அழுத்தம், காரணமாக 2025-26 முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் குறைத்துள்ளதாக நுண்நிதி வங்கியான பந்தன் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் குறைந்து ரூ.86.16 ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு ஆகியவற்றால், இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க