உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐ...
2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக- பாஜக கூட்டணியே வெற்றி பெறும் என்றாா் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது:
குடியரசு துணைத் தலைவராகத் தோ்வாகியுள்ள தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து பேசவுமே அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தில்லி சென்றாா். அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. யாரைக் கண்டும் பயப்படுவது கிடையாது. எந்தவொரு சோதனைகளுக்கும் அதிமுக பயப்படாது. 2026 பேரவைத் தோ்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதனால்தான், எதிா்க்கட்சிகள் அஞ்சுகின்றன. விஜய் வருகையால் அதிமுகவுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. திமுகவுக்கு தான் பாதிப்பு. அதிமுகவுக்கு இனி ஏறுமுகமாக இருக்குமே தவிர இறங்கும் முகமே கிடையாது என்றாா் அவா்.