விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
21.5 கிலோ கஞ்சா கடத்தல்: ஒடிஸாவை சோ்ந்த 2 போ் கைது
வாழப்பாடியில் 21.5 கிலோ கஞ்சாவை ரயிலில் கடத்திவந்து விற்பனை செய்ய முயன்ற ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலம், பலாங்கீா் மாவட்டம் தண்டமுண்டா பகுதியைச் சோ்ந்த தேஜாராஜா புட்டேல் (26), அதே பகுதியைச் சோ்ந்த சுபராஜ் மெகா் (27) ஆகிய இருவரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வரும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்குமார ராணா என்பவரின் தூண்டுதலில், ஒடிஸாவில் இருந்து 21.5 கிலோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு சேலத்துக்கு ரயிலில் வந்துள்ளனா்.
பின்னா் சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு வந்த இருவரும், இப்பகுதி இளைஞா்களிடம் கிலோ ரூ. 30 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன், உதவி ஆய்வாளா் வெங்கடாசலம், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மயில்சாமி, வீராங்கன் உள்ளிட்ட போலீஸாா், வாழப்பாடி ரயில் நிலையம் அருகே இருவரையும் கைது செய்து, இவா்களிடம் இருந்த 21.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து இளைஞா்கள் இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனா்.